தங்கைக்காக அடுப்பு மூட்டி உணவு சமைத்து ஊட்டிவிடும் குட்டி சிறுவன்! நெகிழ வைக்கும் புகைப்படம்!

உலகில் எத்தனை பாசங்கள் வேஷங்கள் ஆனாலும் மழலை பருவத்தில் இருக்கும் அண்ணன், தங்கை பாசம் குறைந்ததாக சரித்திரம் ஏதுமில்லை. அதற்கு உதாரணமாகத்தான் பசியால் தேம்பி தேம்பி அழும் தங்கைக்காக தனக்கு தெரிந்த முறையில் உணவு தயாரித்து அசத்தியுள்ளார் அண்ணன்.


இந்தோனேசியா நாட்டில் இளம் வயதுடைய சிறுவன் தன் தங்கைக்காக பிரைடு ரைஸ் செய்யும் காட்சிகளை பார்த்தவர்கள் எண்ணிக்கை மில்லியனை தாண்டிவிட்டது என்றால் அது மிகையல்ல. 

ஒரு சிறுவன் முன் அடுப்பு எரிந்து கொண்டிருக்கிறத. அதன் மேல் கடாய் இருக்கிறது. முதலில் அந்த கடாயில் சிறிது எண்ணெய் விட்ட பிறகு அதில் முட்டைகளை உடைத்து ஊற்றுகிறான். பின்னர் ஏற்கனவே வெட்டப்பட்ட காய்கறிகளைக் கொண்டு வந்து சகோதரிக்கு கொஞ்சம் கொடுத்து பசியாற்றிவிட்டு கொஞ்சம் தானும் உண்டுவிட்டு வாணலியில் போடுகிறான் அந்த சிறுவன்.

எப்போது உணவு தயார் ஆகுமோ என தங்கை ஏக்கத்தோடு வாணலியை பார்க்கும்போது அதில் அரிசியை கொட்டி நன்றாக கலக்கிறான் அண்ணன். பின்னர் அவர் மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருள்களைச் சேர்க்கிறார். கொஞ்ச நேரத்தில் பிரைடு ரைஸ் வாணலியில் தயார் ஆகிவிடுகிறது. பின்னர் வாணலியில் இருக்கும் உணவை எடுத்து 2 கிண்ணங்களில் போட்டு சகோதரிக்கு தனது கைகளால் உணவளிக்கிறார்.

பொதுவாக குழந்தைகளுக்கு பசி வந்தால் அழுவதை தவிர வேறு எதுவும் தெரியாது. வீட்டில் அனைத்து பொருட்கள் இருந்தாலும் அதை எடுத்து சமைக்கத் தெரியாது. ஆனால் இந்தோனேசியாவில் அந்த சிறுவனுக்கு சமைப்பது எப்படி என்பதை சொல்லிக் கொடுத்து வளர்த்த அந்த பெற்றோரை பாராட்டியே ஆகவேண்டும். வரலாறு பாடம் சோறு போடுகிறதோ இல்லையோ சோறு சமைக்கும் பாடம் என்றும் வயிற்றை நிரப்பும்.