அக்காவின் சுடிதார் துப்பட்டா..! உற்சாகமாக ஊஞ்சல் ஆடிய தம்பி..! சில நிமிடங்களில் சடலமான பயங்கரம்! அதிர்ச்சி காரணம்!

கோவை: அக்காவின் துப்பட்டாவில் ஊஞ்சலாடிய தம்பி மூச்சு திணறி உயிரிழந்தான்.


கோவை மாவட்டம், உக்கடம் ஜிஎம் நகரை சேர்ந்தவர் சதக்கத்துல்லா. இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். இவரது மகன் காஜா உசேன் (10 வயது). 5ம் வகுப்பு படித்து வந்த காஜா, நேற்று மாலை வீட்டில் தனியாக இருந்தபோது தனது அக்காவின் துப்பட்டாவை எடுத்து, வீட்டு ஜன்னலின் இருபுறமும் ஊஞ்சல் போல கட்டி, அதில் தொங்கி விளையாடியுள்ளான்.

அப்போது, எதிர்பாராவிதமாக துப்பட்டா கழுத்தை இறுக்கவே, சிறுவன் காஜா மூச்சுத் திணறி உயிரிழந்தான். அவனது பெற்றோர் உடனடியாக மீட்டு மருத்துவமனையில் சேர்த்தாலும், சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக, டாக்டர்கள் தெரிவித்தனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.