தங்கையை நடுரோட்டில் தகாத முறையில் சீண்டிய இளைஞர்! தட்டிக்கேட்க பாய்ந்த அண்ணன்! ஆனால் ஹாஸ்பிடலில் அட்மிட் ஆன கொடுமை! அதிர்ச்சி சம்பவம்!

உத்தரபிரதே மாநிலத்தில் தங்கைக்கு தொல்லை கொடுத்தவர்களை தட்டிக் கேட்ட சகோதரன் கொல்லப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.


கைரான பகுதியில் உள்ள விஜய்சிங் பாத்திக் அரசு கல்லூரியில் படித்து வரும் மாணவி ஒருவர் தனக்கு சில முகம் தெரியாத நபர்கள் கல்லூரிக்கு செல்லும்போதும், வரும்போது தொல்லை தருவதாக வீட்டில் தெரிவித்திருந்தார். இதுகுறித்து சகோதரனிடமும் சொல்லி அழுதுள்ளார் மாணவி. 

இதனால் ஆத்திரம் அடைந்த மாணவியின் சகோதரன் விக்கி அக்டோபர் 23ம் தேதி தங்கை படிக்கும் கல்லூரி வாசல் அருகே சென்று நின்றுள்ளார். அப்போது வழக்கம்போல் அந்த நபர்கள் மாணவியை கிண்டல் செய்ய, அவர்களுக்கும் விக்கிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து அவர்களில் ஒருவன் திடீரென கத்தியை எடுத்து விக்கியை குத்திவிட்டு தப்பி விட்டான்.

இதையடுத்து ரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்ட விக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதை அடுத்து குற்றவாளிகளை கைது செய்த போலீசார் கொலை மற்றும் பெண்ணுக்கு எதிரான குற்றங்களில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கல்லூரி வாசலில் விக்கி கத்தியால் குத்திய சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. இந்த வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.