ஏண்டா உனக்கு கல்யாணம் ஆன, என் தங்கச்சி கேட்குதா? பால் வியாபாரியை வெட்டி கூறு போட்ட அண்ணன்! மதுரை திகுதிகு

கள்ளக்காதல் விவகாரத்தில் பால் வியாபாரி ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்ட பரபரப்பு சம்பவம் மதுரை மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது.


மதுரை மாவட்டம் மேலஅனுப்பானடி பகுதியில் ரமேஷ் என்ற பால் வியாபாரி வசித்து வந்தார். திருமண ஆன ரமேஷ் சில ஆண்டுகளிலேயே மனைவி பிரிந்து சென்றுவிட்டதால், தனிமையில் வாழ்ந்து வந்தார். நீண்ட காலமாக தனிமையில் வாழ்ந்து வந்த ரமேஷூக்கு துணை ஒன்று தேவைப்பட்டுள்ளது.

பால் வியாபாரத்தில் வயிற்றுப் பசி தீர்ந்து விட்டாலும், உடம்பு பசியை போக்க ஒரு பெண் துணையை நாடியுள்ளார். அவரும் அதற்கு சம்மதிக்க இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் அவ்வப்போது பகுதிநேரமாக குடும்பம் நடத்தி வந்துள்ளனர். இந்த விவகாரம் அந்த பெண்ணின் சகோதரனுக்கு தெரியவர இருவரையும் கண்டித்துள்ளார்.

ஆனால் தங்களுக்கு இருந்த உண்மையான காதலை பிரிக்க காதலர்களுக்கு மனமில்லை. வழக்கம்போல் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அண்ணனை போல ஆத்திரமடைந்த செல்வம் பால் வியாபாரிக்கு பால் ஊற்ற முடிவு செய்துள்ளார். இதை அடுத்து அனுப்பானடியில் ரமேஷ் வீட்டிற்கு கூட்டாளிகளுடன் சென்ற செல்வம் தூங்கிக் கொண்டிருந்தவரை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி உள்ளார்.

காலை எழுந்திருப்போம் என்ற நம்பிக்கையில் உறங்கச் சென்ற ரமேஷ் உயிர் நித்திரையில் இருந்து மீளாமலேயே சென்றுவிட்டது. தகவல் அறிந்து வந்த அவனியாபுரம் போலீசார் ரமேஷ் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து ரமேஷை கொன்றுவிட்டு தலைமறைவான செல்வம் உள்ளிட்ட 4 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.