15 நிமிடங்கள்! உடன் பிறந்த சகோதரியின் கழுத்தை விடாமல் நெறித்த தம்பி! பிறகு அரங்கேறிய பயங்கரம்!

வாஷிங்டன்: அமெரிக்காவில் வைஃபை பாஸ்வேர்ட் கேட்டு அக்காவை உடன் பிறந்த தம்பியே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


அமெரிக்காவைச் சேர்ந்த கெவோன் (18 வயது), தினசரி வீட்டில் வீடியோ கேம்ஸ் விளையாடும் வழக்கம் கொண்டவர். இவரது வீட்டில் வைஃபை பயன்படுத்தும் வழக்கம் இருந்ததால், கெவோன் வீடியோ கேம் விளையாடுவதற்கு அதனை பயன்படுத்தி வந்திருக்கிறான். ஆனால்,  வீட்டில் உள்ள அனைவரும் அதனை பயன்படுத்தியதால், டேட்டா மெதுவாக இருந்திருக்கிறது. 

இதனால், அதிருப்தி அடைந்த கெவோன், சமீபத்தில் ஒருநாள் வீட்டிற்கு முன்பாகவே வந்து, பாஸ்வேர்டை மாற்றிவிட்டு, வீடியோ கேம்ஸ் விளையாடியுள்ளான். இது தெரிந்ததும் பாஸ்வேர்ட் சொல்லும்படி அவனுடைய அம்மா, கேட்டிருக்கிறார். பாஸ்வேர்டை சொல்ல மறுத்த நபர், ஆத்திரத்தில் தனது தாய் என்றும் பாராமல் கத்தியால் குத்தச் சென்றிருக்கிறார். 

இதனை அவரது சகோதரி அலெக்ஸ் குறுக்கிட்டு தடுத்திருக்கிறார். ஆனால், சண்டையை விடாத கெவோன் மிரட்டுவதற்காக, தனது சகோதரி என்றும் பாராமல் அவரது கழுத்தில் சடாரென கத்தியை பாய்ச்சி, 15 நிமிடங்கள் விடாமல் குத்தியுள்ளார். இதற்குள் போலீசாருக்கு தகவல் தெரிந்து, அவர்கள் வந்தபோது, அலெக்ஸ் உயிரிழந்துவிட்டார்.

கெவோனை கைது செய்து, நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. இதில், இன்று (ஆகஸ்ட் 5) இறுதிக்கட்ட விசாரணை நடைபெற்று, அதில் கெவோனுக்கு, ஜாமீனில் வெளிவர முடியாதபடி, வாழ்நாள் சிறைத்தண்டனை விதித்து, நீதிபதி உத்தரவிட்டார்.

வீடியோ கேம்ஸ்க்கு அடிமையான இளைஞர் சகோதரியை கொன்றுவிட்டு, தற்போது சிறையில் வாடுவது இன்றைய இளம் தலைமுறையினரின் வாழ்க்கை தடம் மாறுவதை உணர்த்துவதாக உள்ளது.