மும்பையில் தண்ணீர் பிடிக்கச் சொன்னதால் ஆத்திரமடைந்து அண்ணியை அரிவாளால் தலையில் வெட்டிக் கூறு போட்ட நபர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.
ஆண்மையை சந்தேகித்த அண்ணன் மனைவிக்கு கொழுந்தனால் ஏற்பட்ட விபரீதம்!

மும்பையின் கர் என்ற இடத்தைச் சேர்ந்தவர் நமீதா போக்கேர். இவர் தனது கணவர் நிலேஷ் பொக்கேர் 8 வயது மகன், தனது மாமியார் மற்றும் தனது கணவரின் சகோதரரான யோகேஷ் பொக்கேர் ஆகியோருடன் வசித்து வந்தார்.
யோகேஷ் கடந்த மாதம் வேலையை இழந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. அது முதல் நமீதாவுக்கும், யோகேஷுக்கு சிறு சிறு விவகாரங்களுக்கெல்லாம் தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை வீட்டில் யாரும் இல்லை. இரவு நமீதா வீட்டில் இருந்த பாத்திரங்களில் எல்லாம் தண்ணீர் பிடிக்குமாறு யோகேஷிடம் கூறியுள்ளார்.
ஆனால் ராகேஷ் தண்ணீர் முடிக்க முடியாது என்று கூறியுள்ளார். இதனால் வழக்கம் போல் நமீதா தனது கணவரின் சகோதரர் ராகேஷை வசை பாட ஆரம்பித்துள்ளார். ஒரு கட்டத்தில் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருக்கும் நீயெல்லாம் ஆம்பளையா என கேட்டுள்ளார் நமீதா. இந்நிலையில் ஆத்திரமடைந்த யோகேஷ் நமீதாவுடன் சண்டையிட்டார்.
சண்டை முற்றிய நிலையில் சமையல் அறையில் இருந்த சிறுவகை அரிவாளை எடுத்து வந்த யோகேஷ் நமீதாவின் தலையில் சரமாரியாக வெட்டியதில் ரத்தம் கொப்பளிக்க நமீதா சாய்ந்து விழுந்தார். இதையடுத்து நமீதாவின் கணவர் நிலேஷ் நமீதாவை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடினார். ஆனால் ஏற்கனவே நமீதா உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதனிடையே காவல் நிலையத்தில் சரண் அடைந்த யோகேஷ் மீது கொலை உள்ளிட்ட பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.