அம்பேத்கர் சிலை உடைப்பு..! கட்டுக்குள் வந்த நாகை கலவரம்!

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக பெரும் கலவரம் ஏற்பட்டது இந்நிலையில் அதனை தடுக்க சென்ற போலீசார் மீதும் கல் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.


மற்றும் தாக்குதலின்போது அப்பகுதியில் இருந்த அம்பேத்கரின் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். 

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் காவல் நிலையத்தின் அருகே ஒரு வேன் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது.இந்நிலையில் ரோட்டின் ஓரத்தில் நடந்து சென்ற நபரின் மீது வேன் மோதியதில் நடந்து சென்ற ஒரு பலமான காயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஒரு தரப்பினர் வேனை வழிமறித்து வேனின் மீது கல்வீசி கண்ணாடிகளை உடைத்தனர் மற்றும் ஓட்டுநரை கடுமையாக தாக்கியுள்ளனர்.

இதை அறிந்த மற்றொரு தரப்பினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவர்களுடன் சண்டையிடத் தொடங்கினர்.காவல் நிலையத்தின் அருகே இச்சம்பவம் நடைபெற்றதற்கு அதனை கலைக்க காவல்துறையினரும் வந்துள்ளனர். அப்போது இரு தரப்பினரும் காவல்துறையினரை கடுமையாக தாக்கியுள்ளனர்.

காவல்துறையினர் மீது கல் மற்றும் சோடா பாட்டில்களை எறிந்தும் இருதரப்பினரும் சண்டையிட்டுக் கொண்டுள்ளனர். மற்றும் விபத்துக்கு காரணமாக இருந்த வேனை தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர்.

இதனால் அப்பகுதியில் சில நேரம் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது இதனால் கல் வீச்சில் காயமடைந்த 3 பேரை வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். மற்றும் பல சிறு சிறு காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதையடுத்து இச்சம்பவத்தை அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேந்திரன் தலைமையில் அதிகப்படியான போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர். மற்றும் கலவரத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர தீயணைப்பு துறையினரும் உடனே சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.

இதன் காரணமாக நகரில் உள்ள கடை மற்றும் வணிக வளாகங்கள் அனைத்தும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு இரு தரப்பினர் இடையேயும் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார் இருவரையும் கலைந்து செல்லும்படி உத்தரவிட்டுள்ளனர் இதன் காரணமாக அப்பகுதியில் பல மணி நேரம் போக்குவரத்து தடைபட்டது.

பின்னர் சிறிது நேரத்தில் இயல்பு நிலைக்குத் திரும்பியது. இந்நிலையில் கலவரத்தின் போது அங்கிருந்த அம்பேத்கரின் சிலை சேதம் அடைந்துள்ளது. இதற்கு பாமக தலைவர் ராமதாஸ் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆகியோர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.