பாத்ரூமுக்குள் பார்க்க கூடாததை பார்த்த மனைவி! அதிர்ச்சியில் உறைந்த கணவன்! பிறகு நேர்ந்த சம்பவம்!

பிரிட்டன் நாட்டில் கழிவறைக்கு சென்ற பெண் ஒருவர் அலறி அடித்து திடீரென ஓட்டம் பிடித்தார். மனைவியை பார்த்து பயந்து போன கணவரும் இனிமேல் கழிவறைக்கே செல்லப் போவதில்லை என அதிர்ச்சி அடைந்த ருசிகர சம்பவம் நடந்துள்ளது.


பாம்பை பார்த்தால் படையே நடுங்கும். சாதாரண குடிமக்கள் எம்மாத்திரம். பொதுவாகவே குடியிருப்பு உள்ள இடங்களில் பாம்பை பார்த்தால் அது விஷம் உள்ளவையா இல்லையா என்றெல்லாம் யாரும் யோசிக்கவே மாட்டார்கள். உடனடியாக அதை அடித்து கொன்று எரித்து விடுவது வழக்கம்.

ஏன் என்றால் மற்ற உயிரினங்கள் கடித்தால் மனிதனைக் காப்பாற்றுவதற்கு நீண்ட அவகாசம் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் பாம்பை பொறுத்தவரை மின்சாரம் பாய்வது போலத்தான். ஒருமுறை கொட்டினால் நம்மை சுதாரிப்பதற்குள் எமதர்மன் காலிங் பெல் அடித்துவிடுவான். சொந்த பந்தங்களுக்கும் தந்தி அடித்து விடலாம். 

பிரிட்டனில் உள்ள மாநகரங்களில் பிரதானமாக திகழ்வது சவுத்ஆம்ப்டன். அங்கு ரிச்சர்ட் கிரான்ட் என்பவர் தன்னுடைய மனைவியுடன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் கழிவறைக்கு சென்ற மனைவி திடீரென அலறி அடித்து ஓடி வந்துள்ளார். மனைவி ஓடி வந்ததை பார்த்த ரிச்சர்ட் என்னவென்று பார்க்க பயத்துடன் கழிவறைக்கு சென்றுள்ளார்.

அங்கு கழிவறையின் பீங்கான் தொட்டியில் 4 அடி நீள மலைப்பாம்பு சுருண்டு படுத்துக்கொண்டிருந்தை பார்த்து அவரும் அவசரமாக ஓடி வந்துவிட்டார். அன்று இரவு வனத்துறைக்கு தகவல் அளித்து யாரும் வராததால் பயந்து நடுங்கியபடியே இரவை கழித்தனர் அந்த தம்பதி.

பின்னர் வீட்டிலேயே செல்லப் பிராணியாக பாம்பை வளர்த்து வரும் நண்பர் கொலின்சுக்கு தகவல் தந்தார் ரிச்சர்ட். பின்னர் ரிச்சர்ட் வீட்டிற்கு வந்து கழிவறையில் தூங்கிக் கொண்டிருந்த பாம்பை லாவகமாக பிடித்து அருகில் உள்ள கடை ஒன்றில் விற்றுவிட்டார். பாம்பை எடுத்துவிட்டபோது கழிவறைக்கு செல்லவே ரிச்சர்ட் தம்பதி பயந்து வருகிறது.

ஒருவேளை எடுத்தது ஒரு பாம்பு என்பதால் பாம்பின் கணவர், பிள்ளைகள் சொந்த பந்தங்கள் என ஒவ்வொன்றாக கழிவறை பீங்கானில் இருந்து வந்தால் என்ன செய்வது என பயப்படுகிறார்களோ என்னவோ?

மலைப்பாம்புகள் நச்சுத்தன்மையற்ற பாம்புகள் வகையில் பருமன் மிகுந்ததாக இருக்கும். இவை பெரும்பாலும் ஆப்பிரிக்க கண்டத்தில் சகாரா பாலைவனத்திற்கு தென் பகுதியிலும், ஆசியக் கண்டங்களிலேயே மலைப் பாம்புகள் காணப்படுகின்றன. மலைப் பாம்புகளில் 12 இனங்கள் உள்ளதாக இனங் காணப்பட்டுள்ளன

ஆசியாவிலே வங்கதேசம், நேபாளம், இந்தியா, இலங்கை, நிக்கோபார் தீவுகள், மியான்மார், தென் சீனாவிலும் மலேசியப் பகுதிகளான இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸிலும் மலைப் பாம்புகள் காணப்படுகின்றது.