மோடியின் காஷ்மீர் விளம்பரத்தை அம்பலப்படுத்தும் கிறிஸ் டேவிஸ்!

காஷ்மீருக்கு ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் 24 எம்.பிக்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்கள். இவர்கள் ஐரோப்பிய நாடாளுமன்றத்தாலோ, அல்லது ஐரோப்பிய நாடுகளாலோ, அல்லது இந்திய அரசாலோ அழைத்துச் செல்லப்படவில்லை. இவர்கள் அனைவருமே டூரிஸ்ட் விசாவில் காஷ்மீர் வந்துள்ளார்களா அல்லது அரசு விருந்தினர்களாக வந்துள்ளார்களா எனத் தெரியவில்லை.


இந்த பயணத்திற்கு ஏற்பாடு செய்துள்ளாவர் மடி ஷர்மா இந்தியரான இவர் பிரெஸ்சல்ஸ் நகரை மையமாகக் கொண்டு “வெஸ்ட்’ தன்னார்வக்குழுவை நடத்தி வருவதோடு சிந்தனை மட்டத்தில் செயலாற்றும் பெண்ணாகவும் தன்னை காட்டிக் கொள்கிறார். 

ஆனால் இவர் வலதுசாரிகளுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதோடு சர்வதேச பவர் புரோக்கராகவும் இருக்கிறார் என்பதை தி கார்டியன் வெளிப்படுத்தியுள்ளது. இவருக்கு பிரதமர் அலுவகத்திற்கும் நெருக்கமான தொடர்பு உள்ளது. அந்த நெருக்கத்தை பயன்படுத்தி தனியார் பயணமாக ஒரு தொகுதி எம்.பிக்களை அழைத்து வந்து அவர்களினூடாக கார்ப்பரேட் தொழில் தொடர்புகளை இவர்கள் ஏற்படுத்திக் கொள்ளக்கூடும்.

இன்னொரு பக்கம் பிரிட்டன் எம்,பியான கிறிஸ் டேவிஸை மடி ஷர்மா அழைத்த போது அவர் “எந்த விதமான ராணுவ தலையீடுகளும் இன்றி நான் மக்களை சந்திக்க முடியுமா?” என்று கேட்டதால் அவரை மடி ஷர்மா புறக்கணித்தார். மடி ஷர்மாவின் இந்த பயண ஒழுங்கை நான்கு எம்.பிக்கள் நிராகரித்துள்ளனர்.

இது பற்றி பேசியுள்ள கிறீஸ் டேவிஸ் “மோடியின் விளம்பரங்களுக்கு நான் பலியாக முடியாது. ராணுவத்தை வைத்து காஷ்மீரிகளின் மனங்களை இந்தியா வெல்ல முடியாது” எனக் கடுமையாக பேசியுள்ளார் கிறிஸ்.

என்ன பதில் சொல்லப்போகிறார் மோடி..?