பிரிட்டனில் மகள், மகன் திருமணத்தின்போது தந்தையோ, தாயோ இறந்துவிட்டால் அவரது உடல் எரிக்கப்பட்ட சாம்பலை நகங்களை வைத்துக்கொண்டு அந்த சுப நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதை இறந்தவர்கள் ஆசீர்வாதம் செய்வதாக கருதுகின்றனர்.
மணமக்களை வாழ்த்த சாம்பலாக மகள் திருமணத்திற்கு வந்த தந்தை! கேட்போரை நெகிழ வைக்கும் சம்பவம்!

சரோலேட் வாட்சன் என்ற பெண்ணுக்கும், நிக் என்ற ஆணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது. இந் நிலையில் சரோலேட்டின் தந்தை மிக் பார்பர் புற்றுநோய் பாதிப்பு காரணமாக திடீரென உயிரிழந்து விட்டார். இதனால் அந்த பெண் தனது திருமணத்தின்போது தந்தை உயிரோடு இல்லையே என வேதனை அடைந்தார்.
அப்போது உறவினரான கிறிஸ்டி போலியான நகங்களை விரல்களில் வைத்து தந்தையின் சாம்பலை வைத்துக் கொண்டால் அது இறந்தவர் சுப நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆசீர்வாதம் செய்வதாவே இருக்கும் என தெரிவித்தார்.
போலி நகங்களை தயாரிப்பதில் சிறந்தவரான கிறிஸ்டி சரோலேட்டின் கைகளில் போலி நகங்களை தயாரித்து அதில் அவரது தந்தையின் சாம்பலை பதித்துவிட்டார். அந்த போலி நகங்கள் பல்வேறு நிறங்களில் தயாரிக்கப்பட்டு அதில் உயிரிழந்தவரின் சாம்பல் வைக்கப்பட்டது.
பின்னர் திருமணம் நடைபெற்றது. இதுகுறித்து மணப்பெண் சரோலேட் கூறும்போது தற்போது திருமணத்தில் தன் தந்தை வந்து ஆசீர்வாதம் செய்வதாக உணர்கிறேன் என தெரிவித்தார்.