26 நாட்கள்! 13 பெண்களை கர்ப்பமாக்கியதாக இளைஞர் வெளியிட்ட திக் திடுக் தகவல்!

பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த ஒருவர் 26 நாட்களில் 13 குழந்தைகளுக்கு தந்தையானதாக தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவேற்றி பெருமையடைந்துள்ளார். இச்சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


பிரிட்டன் நாட்டின் பெட்போர்ட் நகரைச் சேர்ந்தவர் சைமன் வாட்சன் 45, தற்போது அவரது சமூக வலைதளப் பக்கத்தில் நான் கடந்த 26 நாட்களில் 13 குழந்தைகளுக்கு தந்தை ஆகிவிட்டேன், மற்றும் 16 பேர் கர்ப்பமாக உள்ளனர். மற்றும் 19 மற்றும் 20வதாக பிறந்த குழந்தைகள் இரட்டையர்கள் என பெருமையுடன் தனது பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.

இந்நிலையில் அதை பார்த்த பொது மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இந்நிலையில் இவர் அதிக பெண்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளாரா? அல்லது இவர் ஒரு பிளேபாயா ? என நினைக்க வேண்டாம் உண்மையில் இவர் ஒரு உயிரணு தானம் செய்பவர். 

இவருக்கு திருமணமாகி பல ஆண்டுகள் ஆன நிலையில் அவரது மனைவி கருத்து வேறுபாடு காரணமாக இவரை விட்டு பிரிந்து சென்றுள்ளனர். இந்நிலையில் தற்போது சைமன் தனிமையில்தான் வசித்துவருகிறார். இதையடுத்து நாட்டில் எவ்வளவோ தம்பதியினர் குழந்தை இல்லாமல் கஷ்டப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அவர்களுக்காக உயிரணு தானம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் இவரை பிரிட்டன் நாட்டின் முன்னணி உயிரணு தானம் செய்பவர் என்ற புகழுக்கு சொந்தக்காரர் ஆவார். இவர் தற்போது வரை 16 ஆண்டுகளில் சுமார் 800 குழந்தைகளுக்கு தந்தையாகியுள்ளார். குழந்தையில்லா தம்பதிகள் மருத்துவமனைக்கு சென்று டெஸ்ட் டியூப் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள நினைக்கையில் அதற்காக அதிக அளவில் பணம் மருத்துவமனைக்கு செலுத்த வேண்டியுள்ளது.

இந்நிலையில் அதை கருத்தில் கொண்டு சைமன் உயிரணு தானம் செய்ய முடிவெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். அதற்காக மிகவும் குறைந்த கட்டணமாக 50 பவுண்டுகள் தான் வாங்குகிறார். இந்நிலையில் தனது உயிரணுவில் பிறந்த குழந்தைகளை சந்திக்க தான் ஆர்வமாக இருப்பதாகவும் சைமன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இதுவரை அவர்களை நான் சந்தித்ததே இல்லை எனவும் வருத்தம் தெரிவித்துள்ளார். குழந்தைகள் தன்னை சந்திக்க விரும்பினால் அதை நான் வரவேற்பதாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.