ரத்தக் கசிவு! கருச்சிதைவு! டாக்டர்கள் அலட்சியத்தால் இளம் நிறை மாத கர்ப்பிணிக்கு நேர்ந்த விபரீதம்!

பிரிட்டனில் பிரசவ வலியோடு வந்த பெண்ணுக்கு சிகிச்சை அளிக்க தாமதம் செய்ததால் கருச்சிதைவு ஏற்பட்டதால் அந்தப் பெண் சோகத்தில் ஆழ்ந்துள்ளார்.


எமிரெணி என்ற பெண் 2வது முறையாக கர்ப்பம் தரித்த நிலையில் 10 மாதமாக குழந்தையை பத்திரமாக வயிற்றில் வளர்த்து வந்தார். இந்நிலையில் வீட்டில் இருந்த எமிரெணிக்கு திடீரென ரத்தப் போக்கு ஏற்பட்டது. இதை அடுத்து ப்ளைமவுத் என்ற மருத்துவமனைக்கு அவசர சிகிச்சை பிரிவுக்கு சென்றார்.

ஆனால் அவசர சிகிச்சை பிரிவில் ஏற்கனவே ஏராளமானோர் காத்திருந்தனர். அவர்களில் பெரும்பாலும் போதைக்கு அடிமையாக அதனால் பாதிக்கப்பட்டவர்கள். எனவே கிட்டத்தட்ட 12 மணிநேரம் கழித்து சிறுநீர் பரிசோதனை, ஸ்கேன் உள்ளிட்டவை எமிரெணிக்கு எடுக்கப்பட்டது. பின்னர் ஸ்கேன் ரிப்போர்ட்டை பார்த்தபோது கர்ப்ப பையில் குழந்தை இறந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதை ஏற்க முடியாமல் எமிரெணி மருத்துவமனை வளாகத்தில் கதறி அழுதார். 

ஒரு மருத்துவமனையில் அதுவும் அவசர சிகிச்சை பிரிவில் இந்த மாதிரி மோசமான அனுபவத்தை கண்டதில்லை என வேதனையுடன் அழுதார் எமிரெணி. சாப்பிடாமல், தூங்காமல் மருத்துவமனையில் காத்திருந்த எனக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டது எனக் கூறியும் மருத்துவமனை நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை என தெரிவித்தார். மருத்துவமனையில் அதிகநேரம் இருந்ததால்தான் கருச்சிதைவு ஏற்பட்டதற்கான ஆதாரம் எதுவும் வெளியாக வில்லை.

இது தொடர்பாக மருத்துவமனை தரப்பில் வெளியிடப்பட்ட செய்தியில் எமிரெணிக்கு ஏற்பட்ட இழப்புக்காக வருந்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மருத்துவமனையின் ஆலோசனை மையத்தை எமிரெணி தொடர்பு கொண்டு உதவி பெறுமாறும் மருத்துவமனை தெரிவித்துள்ளது. நம்மூரில் ஒரு மணிநேரம் மருத்துவர் பார்க்கவில்லை என்றாலே சாலை மறியல் செய்யும் மக்களை போல் அங்கு யாரும் இல்லை போலும்.