ஒரு மாதத்திற்கு இரண்டு முறை மட்டுமே குளியல்! தண்ணீரும் குடிக்க முடியாது! மீறினால்? 21 வயது இளம் பெண்ணுக்கு வந்த விநோத நோய்!

லண்டன்: மாதத்திற்கு 2 முறை மட்டுமே குளிக்கும் விநோத அலர்ஜிக்கு இளம் மாணவி ஒருவர் ஆளாகியுள்ளார்.


டெஸா ஹான்சென் ஸ்மித் எனும் அவருக்கு Aquagenic Urticaria எனும் அரிய வகை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆம், உலகில் மிகவும் 100 பேருக்குக் குறைவான மக்கள்தான் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பாதிப்பு ஏற்பட்டால், தண்ணீரை பார்த்தாலே அலர்ஜி ஏற்படும். குளிக்கவே தோன்றாது.

மேலும், தனது உடலில் இருந்து வெளியாகும் வியர்வை, எச்சில் தவறுதலாக பட்டால் கூட தோல் எரிச்சல், அரிப்பு, சிவத்தல், தடிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படும். இதன்படியே, ஸ்மித் தனது பாதிப்பிற்காக தீவிர மருத்துவ சிகிச்சை எடுத்து வருகிறார்.  

தற்போதைய நிலையில் அவரால் மற்றவர்களைப் போல விளையாடவோ அல்லது மற்ற பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கவோ முடியாது. தற்போதைய சூழலில் ஸ்மித்தின் தாய் ஒரு மருத்துவர் என்பதால், வீட்டிலேயே வைத்து, தனது மகளுக்கு தேவையான சிகிச்சைகளை அளித்து வருகிறார்.

இதன் விளைவாக முன்பு இருந்ததைவிட ஸ்மித்தின் உடல்நிலை சற்று தேறியுள்ளது. எப்படி என்கிறீர்களா, முன்பெல்லாம் மாதக்கணக்கில் குளிக்காமல் அவதிப்பட்ட ஸ்மித், தற்போது மாதத்திற்கு 2 முறை குளிக்கும் அளவிற்கு உடல்நலம் தேறியுள்ளார். இதைவிட ஒரு கொடுமை, தண்ணீர் குடிப்பது கூட அலர்ஜியாக உள்ளதென்று, ஸ்மித் குறிப்பிடுகிறார். இதனால், அவருக்கு வேண்டிய தண்ணீர் மற்றும் திரவ உணவுகளை ட்ரிப்ஸ் முறையில் உடலுக்குள் செலுத்த வேண்டிய நிலை உள்ளது குறிப்பிடத்தக்கது.