பின்னழகில் இருந்த மச்சத்தை நீக்கியதால் ஏற்பட்ட பயங்கரம்..! 20 வயது பெண்ணுக்கு தலையில் செய்யப்பட்ட 5 ஆப்பரேசன்! அதிர்ச்சி காரணம்!

லண்டன்: முதுகில் ஏற்பட்ட மருவை அகற்றிய இளம்பெண்ணிற்கு மூளையில் கட்டி வந்துள்ளது.


பிரிட்டனைச் சேர்ந்தவர் மெக்கெனா கார்ட்டர். 20 வயதான இப்பெண், தனக்கு மெலனோமா தோல் புற்றுநோயின் ஆரம்ப நிலை அறிகுறிகள் இருப்பதாக, தெரிந்துகொண்டார். இதற்கேற்ப, முதுகில் ஏற்பட்டிருந்த மரு வளர்ச்சியை அறுவை சிகிச்சை மூலமாக நிவர்த்தி செய்துகொண்டார். ஆனாலும், அவருக்கு அடுத்த சில நாட்களிலேயே புதிய தொல்லை ஏற்பட்டது. ஆம், அடிக்கடி தலைவலி, ஃப்ளூ காய்ச்சல் வந்ததோடு, அவரது மூளையில் கட்டி இருப்பதாகவும், மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.  

மூளையில் ஏற்பட்ட புற்றுநோய் படிப்படியாக, கல்லீரல், நுரையீரல் மற்றும் எலும்புகளுக்கும் பரவியதாக தெரியவரவே அந்த பெண் அதிர்ச்சி அடைந்தார். முதுகில் ஏற்பட்ட மரு வழியாக, இந்த புற்றுநோய் பரவ தொடங்கியதாகவும், அதனை அறுவை சிகிச்சை செய்து அகற்றிய பிறகும் புற்றுநோய் பாதிப்பு குறையாமல் இருப்பது வேதனை அளிப்பதாக உள்ளதென்று, மெக்கனா கார்ட்டர் வேதனை தெரிவிக்கிறார்.  

தற்போதைய நிலையில், மூளையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்து கட்டி அகற்றப்பட்டுள்ளது. மற்ற பகுதிகளில் உள்ள புற்றுநோய் பாதிப்பை நீக்க மருத்துவர்கள் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.