முகத்தை பளபளப்பாக்கும் கிரீமால் இளம் பெண்ணுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை! அதிர வைக்கும் காரணம்! உஷார் பெண்களே!

லண்டன்: சொறி சிரங்கால் பாதிக்கப்பட்ட பெண், மருந்துகள் உதவி இல்லாமல் குணம்பெற்றுள்ளார்.


பிரிட்டனில் உள்ள மார்க்கெட் ஹார்போரோ பகுதியை சேர்ந்தவர் ஆலிஸ் பர்லீ (23). இவர், கடந்த 8 ஆண்டுகளாக, எக்ஸிமா எனப்படும் சொறி சிரங்கால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால், உடல் முழுக்க தோல் சிவந்து, உரிந்து, மணல் போல பொடிப் பொடியாக உதிர்வது வழக்கமாக இருந்தது. இதனைச் சரிசெய்ய மருத்துவர்கள் பரிசோதித்த ஸ்டீராய்ட் வகை க்ரீம்களை அதிகளவில் ஆலிஸ் பயன்படுத்தி வந்தார். ஆனால், அவர் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை.

ஆண்டுகளாக, பல வகையான மருந்துகளை பயன்படுத்தியும் விடாத சொறி சிரங்கால் எரிச்சல் அடைந்த ஆலிஸ் சில மாதங்களுக்கு முன்பாக, மருந்துகள், க்ரீம்களை கைவிட தீர்மானித்தார். இதன்படியே மருந்து பயன்பாட்டை நிறுத்தினாலும், தோல் உரிதல் அதிகமாக நிகழ்ந்துள்ளது. முகம் உள்பட உடல் முழுக்க தோல் உரிந்து, மிகவும் விகாரமாக அவர் காட்சியளித்தார். இதையடுத்து, வேலைக்குச் செல்ல முடியாமல் அதனை ராஜினாமா செய்ய நேரிட்டது. வீட்டிலேயே முடங்கிய ஆலிஸ், தினமும் மணல் போல தோல் உரிவதை தடுக்க முடியாமல் மிகவும் வேதனைக்கு உள்ளானார்.  

ஆனால், சில மாதங்களில் ஒரு மாற்றம் ஏற்பட்டது. ஆலிஸ்க்கு தோல் உரிவது நின்று, சொறி சிரங்கு திடீரென மாயமானது. இதனை அவரால் நம்பவே முடியவில்லை. முகம் பளீச்சென பழைய பொலிவை திரும்பப் பெற்றதால், ஆலிஸ் தற்போது மேற்படிப்பு படிக்க தீர்மானித்துள்ளார். ''படுக்கை முழுக்க மணல் போல தோல் செதில்கள் கிடக்கும், அதனை அடிக்கடி சுத்தப்படுத்தி வந்தேன், எனினும், மன உறுதியை கைவிடாமல் தகுந்த உணவுக் கட்டுப்பாட்டுடன் இருந்து, நினைத்ததை சாதித்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது,'' என்று ஆலிஸ் குறிப்பிடுகிறார்.