அடுத்தடுத்து கருச்சிதைவு! திடீரென மயங்கிய பெண்மணி! 3 குழந்தைகளை பிரசவித்த அதிசயம்!

பிரிட்டனில் இருமுறை கருச்சிதைவு ஏற்பட்டு இனி இயற்கையாக குழந்தை பிறக்க வழியே இல்லை என விரக்தியில் இருந்த பெண் ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகளை பெற்றெடுத்த அதிசயம் நிகழ்ந்துள்ளது.


துர்காம் நகரை சேர்ந்தவர் ஸ்டெப்னி. இவரது கணவர் மைக்கேல் கப். ஸ்டெப்னி இருமுறை கருவுற்ற நிலையில் இரு முறையும் கருச்சிதைவு ஏற்பட்டது. இதையடுத்து ஸ்டெப்னி இயற்கையாக கருத்தரிக்க வழியே இல்லை என மருத்துவர்கள் தெரிவித்த நிலையில் தம்பதிகள் விரக்தி அடைந்தனர் இதையடுத்து அவர்கள் செயற்கை முறை கருத்தரிப்புக்கான முயற்சிகளை மேற்கொண்டனர்.

இந்நிலையில் ஸ்பெயினுக்கு இந்த தம்பதிகள் சுற்றுலா சென்றுவிட்டு திரும்பிய நிலையில் திடீரென ஸ்டெப்னிக்கு தலைசுற்றல் ஏற்பட்டது. அவரை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் சென்றபோது அவர்களுக்கு நம்ப முடியாத ஆச்சரியம் காத்திருந்தது.

ஸ்டெப்னி கருவுற்றிருந்தார். அப்போது அவருக்கு பரிசோதனை மேற்கொண்ட போது அவரது கருவில் ஒரு குழந்தை இருந்தது தெரியவந்தது. அதன் பிறகு அடுத்தடுத்த வாரங்களில் எடுக்கப்பட்ட இரு பரிச்சோதனைகளின் போது மேலும் இரண்டு குழந்தைகள் அவரது கருவில் உருவாகி இருப்பது தெரியவந்தது.

இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் 30ஆம் தேதி ஸ்டெப்னீ மூன்று குழந்தைகளை பெற்றெடுத்தார். அவர்களுக்கு ஒலி அன்னா, இசபெல்லா, பெரியன்னா என அந்த தம்பதிகள் பெயரிட்டுள்ளனர் இது தன் வாழ்நாளில் நிகழ்ந்த மிகப்பெரிய அற்புதம் என்று கூறுகிறார் ஸ்டெப்னி.