மண்டை ஓடு தெரியும் அளவிற்கு கடித்துக குதறிய ஜெர்மன் ஷெப்பர்ட்! வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த போது நிகழ்ந்த பயங்கரம்..!

லண்டன்: ஜெர்மன் ஷெப்பர்ட் நாய் சிறுமியை கடித்துக் குதறிய வேதனை சம்பவம் நிகழ்ந்துள்ளது.


பிரிட்டனில் உள்ள சவுத் யார்க்சைர், வொம்ப்வெல் பகுதியை சேர்ந்தவர் சோஃபி எவான்ஸ். 7 வயதாகும் இந்த சிறுமியை அவரது விட்டில் வளர்க்கும் ஜெர்மன் ஷெப்பர்ட் நாய், கடந்த ஜனவரி மாதம் கடித்து குதறியுள்ளது. இதில், சிறுமியின் முகம், கண் மற்றும் தலைமுடிகள் சிதைந்ததோடு, மண்டையோடும் கிழிந்துள்ளது. ரத்தக் காயத்துடன் துடிதுடித்த சிறுமியை மீட்ட அவரது தாய், மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.  

சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது வலது கண் பார்வை இழக்கும் அளவுக்கு நாயின் பற்கள் பதிந்துவிட்டதைக் கண்டனர். இதேபோல, கிழிந்து போன மண்டையோட்டை தையல் போட்டு காப்பாற்றினர். பிறகு, கண்ணையும் அறுவை சிகிச்சை செய்து காப்பாற்றியுள்ளனர். பிறகு, சிறுமியின் முகத்தையும் போராடி தையல் போட்டு சரிசெய்திருக்கின்றனர். தற்போது சிறுமி உடல்நலம் பெற்றுள்ளார்.  

வளர்ப்பு பிராணிகளிடம் வீட்டில் உள்ள சிறுவர், சிறுமியரை பாதுகாத்து வளர்க்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.