குழந்தை பெற்றுக் கொள்ள தீவிர முயற்சி! திடீரென வீங்கிய வயிறு! மகிழ்ச்சி அடைந்த மனைவிக்கு ஸ்கேன் ரிப்போர்ட்டில் காத்திருந்த அதிர்ச்சி!

பிரித்தானியா நாட்டில் தம்பதியினரின் மனைவிக்கு வயிற்று வலி என்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஸ்கேன் செய்ததில் அவருக்கு கருப்பை புற்றுநோய் இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த செய்தியினை கேட்டு கணவர் அதிர்ச்சியில் ஆழ்ந்தார்.


பிரித்தானியா நாட்டில் வசிக்கு Marcel என்பவருக்கு Amy Van Wyk என்ற பெண்ணுக்கும் கடந்த 2014-ல் திருமணம் நடைபெற்றது. திருமணம் நடந்து சில ஆண்டுகள் கடந்த பின்னரும் Amy Van Wyk பெண்ணால் கருத்தரிக்க முடியவில்லை. ஆனால் இருவரும் மருத்துவர்களை சென்று பார்க்கவில்லை. இந்நிலையில், கடந்த 2016-ல் Amy-க்கு உடல் நலக்கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனைக்கு அவர் சென்றார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் Amy-க்கு கருப்பை நீர்க்கட்டி உள்ளதாகவும், அதனால் அவருக்கு பெரிதாக பாதிப்பு ஏற்படாது என்றும் கூறினார். 

இதனை நன்பி இவர் மேற்கொண்டு சிகிச்சை எடுத்து கொள்ளமால் இருந்துள்ளனர். இதன் பின்னர் கடந்த 2018ல் Amy-க்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டதோடு, வயிறும் பெரிதாக வீங்கியது. இதனை கண்டு அதிர்ந்த இருவரும் மருத்துவமனைக்கு சென்று அங்கு ஸ்கேன் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டது. அதன் முடிவில் அவருக்கு கருப்பை புற்றுநோய் இருப்பதும், நோயானது தீவிரமடைந்துள்ளதும் தெரியவந்தது.

இந்த செய்தினை கேட்டு Amy-யும் அவர் கணவரும் அதிர்ச்சியடைந்தனர். மேலும் Amy-ன் கருப்பை மற்றும் கருமுட்டை குழாயை நீக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறினார்கள். அதன்படி இரண்டும் அறுவை சிகிச்சை மூலம் நீக்கப்பட்டது. இதன் காரணமாக Amy இயற்கையாக குழந்தை பெற்று கொள்ளவே முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

சிகிசைக்கு பின்னர் Amy ஒரு பெண் தாய் ஆகும் கனவு எல்லா பெண்களை போல் எனக்கும் இருந்துள்ளது. ஆனால் கடவுள் எனக்கு அந்த பாக்கியம் தரவில்லை என்று கதறி அழுத்தார். மேலும், Amy நான் எப்போதும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையையே பின்பற்றி வந்தேன். எனக்கு எதனால் இவ்வளவு பெரிய நோய் ஏற்பட்டது என தெரியவில்லை என்று புலம்பினார்.