லண்டன்: சோரியாசிஸ் பாதிக்கப்பட்ட விமான பணிப்பெண் பால் மற்றும் இறைச்சியை கைவிட்டதால் உடல்நலம் தேறியுள்ளார்.
உடல் முழுவதும் சிவப்பு சிவப்பாக பருக்கள்..! அவதிப்பட்ட பெண்மணி தவிர்த்த இரண்டு உணவுகள்! ஒரே மாதத்தில் குணமான அதிசயம்!

பிரிட்டனில் உள்ள பிர்மிங்காம் பகுதியை சேர்ந்தவர் ஜார்ஜியா ராபின்சன். 25 வயதாகும் இவர் விமான பணிப்பெண் வேலை செய்கிறார். ஆனால், அவருக்கு உடல் முழுக்க சோரியாசிஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், ஜார்ஜியாவின் உடலை பார்ப்பதற்கு, தீ விபத்தில் பாதிக்கப்பட்டது போலவே இருக்கும். எனவே, அவரை பார்ப்பவர்கள் பலரும் இதைச் சொல்லி கிண்டல் செய்ததால், வேலை செய்ய முடியாத படி மன உளைச்சலுக்கு ஆளானார்.
இதையடுத்து தனது பாதிப்பை நிவர்த்தி செய்ய ஜார்ஜியா சபதம் எடுத்தார். இதற்காக, கடந்த ஒரு மாதமாக, இறைச்சி மற்றும் பால் பொருட்களை சாப்பிடுவதை நிறுத்திவிட்டார். வீகன் எனப்படும் சுத்த சைவ உணவுகளை மட்டுமே ஒரு மாதமாக சாப்பிட்டதன் மூலமாக, அவரது சோரியாசிஸ் நோய் ஆச்சரியப்படும் வகையில் மறைந்தேவிட்டது.
அசைவ உணவுகளை விட வீகன் உணவுகள் தோல் சார்ந்த நோய்கள் மற்றும் கெதிப்பு போன்றவை ஏற்படாமல் உடலை காப்பாற்றுவதில் நல்ல பலன் தருவதாக உள்ளதென்று, ஜார்ஜியா மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார். முன்பெல்லாம் ஸ்ட்ராபெர்ரி பழம் போல உடல் முழுக்க சோரியாசிஸ் பாதிப்பு காணப்பட்ட நிலையில், தற்போது பளிச் தோற்றம் பெற்றுவிட்டதாக, அவர் குறிப்பிடுகிறார்.