பசிக்கவே இல்லை..! உடல் மெலிந்தது..! ஒரே மாதிரி உயிரிழந்த 5 பெண்கள்! அதிர்ச்சியில் உறைந்த டாக்டர்கள்!

பிரிட்டனில் பசியின்மை நோயை கண்டறிய தாமதம் ஆனதால் அந்நோயால் பாதிக்கப்பட்ட 5 பெண்கள் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.


கடந்த 2012ம் ஆண்டு ஒரு வித மர்ம நோயால் ஆடன்ப்ரூக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் அவெரில் ஹார்ட் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் கேம்பிரிட்ஜ் மற்றும் பீட்டர்பாரோவ் என்எச்எஸ் பவுண்டேஷன் டிரஸ்ட் மூலம் கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் இறந்த பிறகு வந்த பரிசோதனை அறிக்கையில் பசியின்மை நோயால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. 

அதேபோல் 2017 மற்றும் 2018ம் ஆண்டு காலக் கட்டங்களில் மர்ம நோயால் 4 பெண்கள் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இவர்களின் ரத்த பரிசோதனை அறிக்கையும் தாமதமாக வந்துள்ளது. அந்த ரத்த பரிசோதனை அறிக்கையில் இவர்களும் பசியின்மை நோயால் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

மருத்துவர்கள் உண்மையான பாதிப்பை தெரிந்து கொள்ள அதிக நேரம் எடுத்துக் கொண்டதாலேயே உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 2012ல் அவெரில் ஹார்ட் உயிரிழந்தபோது எந்த அளவுக்கு மருத்துவமனை நிர்வாகம் அஜாக்கிரதையாக இருந்ததோ இன்றும் அதேபோல்தான் மருத்துவர்கள் இருப்பதாக அவரது குடும்பத்தார் குற்றம் சாட்டுகின்றனர். 

அதேசமயம் பசியின்மை நோய்க்கு சிகிச்சை அளிக்க தேவையான மருத்துவர்களை நியமிக்க சில இடர்பாடுகள் உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவிக்கிறது. எது எப்படி இருந்தாலும் பசியின்மை நோயை கண்டறியவும், அதற்கு சிகிச்சை அளிக்கவும் போதுமான கட்டமைப்பு வசதிகள் இல்லாததே 5 பெண்கள் உயிரிழக்கக் காரணம் என கூறப்படுகிறது.