ஸ்ருதியை கூட்டிட்டு வாங்க! நிர்வாகியின் ஏடா கூட ஆசை! கமல்ஹாசன் செம டென்ஷன் !

பிரச்சாரத்திற்கு ஸ்ருதியை கூட்டிட்டு வாங்கனு நிர்வாகி ஒருவர் கூறியதால் கமல் டென்சனாகியுள்ளார்.


புதுச்சேரி மீட்டிங்கில் கமல்ஹாசனைப் பார்க்க பெண்களிடம் அடிதடி கிளம்பியதை நிர்வாகிகள் ரொம்பவும் நல்ல செய்தியாகத் தெரிவித்தனர். ‘இப்பவும் நீங்கதான் காதல் மன்னன், அதனால பெண்கள் கூட்டம் கூட்டமா வர்றாங்க... கண்டிப்பா ஒவ்வொரு தொகுதியிலும் 1 லட்சம் ஓட்டு நிச்சயம்’ என்று பேசினார்கள்.

உடனே உச்சி குளிர்ந்த கமல்ஹாசன், பெண்கள் ஓட்டு நமக்கு நிச்சயம் வந்திடும், அதுபோல ஆண்கள் ஓட்டையும் அள்ளுறதுக்கு ஏதாச்சும் வழியிருந்தா சொல்லுங்க என்று கேட்டார். அதைக் கேட்டதும், ஆர்வமிகுதியால் நிர்வாகி ஒருவர் கொடுத்த ஐடியா கமல்ஹாசனை டென்ஷனாக்கி விட்டதாம்.

அப்படியென்ன கேட்டார் என்கிறீர்களா? நமது முக்கியமான வேட்பாளர்கள் நிற்கும் தொகுதிக்கு மட்டும் ஸ்ருதி மேடத்தைக் கூட்டிட்டு வந்து ஓட்டு கேட்டா, நல்ல ரெஸ்பான்ஸ் இருக்கும் என்று சட்டென்று தெரிவித்துவிட்டார்.

அதைக் கேட்டு அத்தனை நிர்வாகிகளும் கப்சிப். சட்டென வேறு எதுவும் பேசமுடியாத கமல் காரில் ஏறி பறந்தே விட்டார். அதன்பிறகு மற்ற நிர்வாகிகள் அவரை கடிக்க, ‘பிரியங்கா காந்தி போல ஸ்ருதி மேடம் வரலாம்னுதானே சொன்னேன்... அதுல என்ன தப்பு’ என்று இன்னமும் புரியாமல் பேசினாராம்.

கமலுக்கு ஏற்ற நிர்வாகிதான்.