பாலம் திறப்பு விழா! எடப்பாடிக்கு தண்ணி காட்டிய திமுக எஸ் ஆர் பார்த்திபன்!

சேலத்தில் நடைபெற்ற பாலம் திறப்பு விழாவில் திமுகவினரை குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எம் பி எஸ் ஆர் பார்த்திபன் தண்ணி காட்டி இதுதான் தற்போது அம்மாவட்டத்தில் ஹாட் டாப்பிக்.


தமிழகத்திலேயே முதல்முறையாக ஈரடுக்கு மேம்பாலம் ஒன்று சேலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் ஒரு பகுதி பணிகள் மட்டும் நிறைவடைந்துள்ளது. இதற்கான திறப்பு விழா சேலத்தில் நடைபெற்றது.

விழாவில் சேலம் எம்பி என்கிற முறையில் திமுகவைச் சேர்ந்த எஸ் ஆர் பார்த்திபனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதனை ஏற்று விழா தொடங்குவதற்கு சுமார் ஒரு மணி நேரத்திற்கு முன்னரே எஸ் ஆர் பார்த்திபன் வந்து வந்து சேர்ந்து விட்டார். அதோடு மட்டுமல்லாமல் மாவட்டம் முழுவதிலும் இருந்து தன்னுடைய தொண்டர்களையும் அங்கு அழைத்து வந்திருந்தார் எஸ் ஆர் பார்த்திபன். இதனால் விழா அரங்கம் முழுவதும் திமுகவினரால் நிரம்பி வழிந்தது.

ஒரு கட்டத்தில் அதிமுகவினர் மர நாற்காலிகள் இல்லை. இதனால் கோபமடைந்த அதிமுகவினர் அங்கிருந்த காவல்துறையினரிடம் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் எடப்பாடி வாழ்க என்று அவர்கள் முழக்கமிட்டுக் கொண்டே இருந்தனர். இதனால் கடுப்பான திமுகவினர் தளபதி வாழ்க என்று முழக்கமிட ஆரம்பித்தனர்.

இந்த சூழ்நிலையில் விழாவில் பங்கேற்பதற்காக எடப்பாடி பழனிசாமி வீட்டில் இருந்து புறப்பட்டார். ஆனால் விழா அரங்கில் திமுக அதிமுக இடையே மோதல் ஏற்படும் சூழல் இருந்த காரணத்தினால் எடப்பாடியை அங்கு வர வேண்டாம் என்று போலீசார் கேட்டுக்கொண்டனர். இதனையடுத்து எடப்பாடி மீண்டும் தனது வீட்டிற்குச் சென்றுவிட்டார்.

இதற்கிடையே எஸ் ஆர் பார்த்திபனை சந்தித்து காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். பிறகு எஸ் ஆர் பார்த்திபன் கேட்டுக் கொண்டதைத் தொடர்ந்து திமுகவினர் அமைதியடைந்தனர். இதன் பிறகே எடப்பாடி பழனிச்சாமி விழா அரங்கிற்கு வருகை தந்தார்.

நிகழ்ச்சியில் பேசும்போது அவர் எம்பி என்கிற முறையில் எஸ் ஆர் பார்த்திபன் பெயரை தெரிவித்தார். அப்போது அங்கு கூடியிருந்த அதிமுகவினர் உற்சாகமாக முழக்கம் இட்டு ஆர்ப்பரித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அதிமுகவினர் பதிலுக்கு எடப்பாடி வாழ்க என்று முழக்கமிட்ட ஆரம்பித்தனர்.

பிறகு போலீசார் சென்று அவர்களை அமைதியாக அமர வைத்தனர். ஒருவழியாக முதலமைச்சர் பேசி முடித்தவுடன் விழா நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து பாலத்திற்கு ரிப்பன் வெட்டி போக்குவரத்தை துவக்கி வைக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அங்கு சென்றார்.

ஏற்கனவே மேட்டூர் எம்எல்ஏவாக இருந்துள்ள எஸ் ஆர் பார்த்திபன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிகழ்ச்சியில் தன்னுடைய செல்வாக்கை நிரூபிக்க வேண்டும் என்பதற்காகவே திட்டம் போட்டு திமுகவினர் வைத்ததாக அதிமுகவினர் குற்றம் சாட்டுகின்றனர். அரசு விழாவில் வைத்து திமுக எம்பி அரசியல் செய்து விட்டதாகவும் அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். ஆனால் இது ஜனநாயக நாடு அதிமுகவினரை போல் திமுகவினருக்கும் இந்த விழாவில் பங்கேற்க உரிமை உள்ளது என்று எஸ் ஆர் பார்த்திபன் தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

எது எப்படியோ இன்றைய நிகழ்ச்சிகள் எடப்பாடி பழனிச்சாமிக்கு எஸ் ஆர் பார்த்திபன் கிட்டத்தட்ட தண்ணி காட்டி விட்டார் என்பது மட்டும் உண்மை.