எனது அந்த மாதிரியான போட்டோவை என் கணவனுக்கு அனுப்பு..! காதலனுடன் சேர்ந்த இளம் மனைவி அரங்கேற்றிய திடுக் சம்பவம்! அதிர வைக்கும் காரணம்!

சென்னை: மாப்பிள்ளை வீட்டாருக்கு காதல் புகைப்படங்களை அனுப்பி திருமணத்தை நிறுத்திய பெண்ணைப் பற்றிய செய்திதான் இது.


சென்னை அயனாவரம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு சமீபத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஆனால், பெற்றோரின் விருப்பத்திற்கு மாறாக, அந்த பெண் ஏற்கனவே இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இதன்பேரில், திருமணத்தை தடுத்து நிறுத்த அவர் விநோத திட்டம் ஒன்றை வகுத்தார்.

அதாவது, காதலனுடன் நெருங்கிப் பழகியபோது எடுத்த புகைப்படங்களை காதலனின் செல்ஃபோன் நம்பரில் இருந்து மாப்பிள்ளை வீட்டாருக்கு அனுப்பி வைத்தால், திருமணம் நின்றுவிடும் என இளம்பெண் திட்டமிட்டுள்ளார்.  

இதன்படியே புகைப்படத்தை அவரது காதலன் மாப்பிள்ளை வீட்டாருக்கு அனுப்பி வைக்க, அதனை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக போலீசார் உதவியுடன் குறிப்பிட்ட செல்ஃபோன் நம்பரை டிரேஸ் செய்ததில் அது நெசப்பாக்கத்தைச் சேர்ந்த இளைஞரின் முகவரியை காட்டியிருக்கிறது. அவர்தான், பெண்ணின் காதலன். அவரை விசாரித்த போலீசார், காதலை உறுதிப்படுத்தியதோடு, இதுபற்றி மாப்பிள்ளை மற்றும் பெண் வீட்டாருக்கும் தகவல் தெரிவித்தனர். இதையேற்று குழப்பத்தை தவிர்க்கும் வகையில் மாப்பிள்ளை வீட்டார் உடனடியாக திருமணத்தை நிறுத்துவதாக அறிவித்தனர்.