மணமேடையில் மயங்கி விழுந்த மணப்பெண்! விரைந்து வந்த டாக்டர்! ஒரே ஒரு வார்த்தை அதிர்ச்சியில் உறைந்த மணமகன்!

கன்னியாகுமரி மாவட்டம் இடைக்கோடு பகுதியைச் சேர்ந்த இளைஞருக்கும்,பாகோடு பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கும் கல்யாணம் ஏற்பாடு செய்யப்பட்டது.


இந்த கல்யாணமானது பாகோடு பகுதியில் உள்ள சி.எஸ்.ஐ சர்ச்சில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.முதலில் மணமகன் கையில் மணமகள் கையை பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதற்கு பிறகு தான் தாலி கட்டும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். சர்ச்சில் போதகர் வாக்குறுதிகளை வாசிக்க மணமக்கள் அதை ஏற்றுக்கொள்வது வழக்கம்.ஆனால் மணமகளிடம் இருந்து பதிலே வரவில்லை.

திடீரென மயங்கி கீழே விழுந்தார்.உறவினர்களும், நண்பர்களும் குவிந்து வருகின்றனர். உடனடியாக மணப்பெண் வீட்டுக்காரர்கள் அவரை சர்ச்சில் உள்ள அறைக்குள் தூக்கிச்சென்று டாக்டரை வரவழைத்தனர்.டாக்டர் செக் செய்து பார்த்து விட்டு "நல்லாதானே இருக்காங்க"..கல்யாணத்த நடத்தலாமே என்று கூறினார்.

அப்போது மணப்பெண் டாக்டரின் கையை பிடித்துக்கொண்டு "என்னை காப்பாத்துங்க டாக்டர் எனக்கு இந்த கல்யாணம் பிடிக்கலை" என்று கெஞ்சினார்.என்ன ஆச்சோ என்று நின்று கொண்டிருந்த மணமகனின் காதில் விழுந்தது. இருந்தாலும் மணமகளிடம் தனியாக பேசினார் மணமகன். எனக்கு உங்கள பிடிக்கல என்று சொல்லினார். மணமகனின் வீட்டாரும் பேசி பார்த்தனர் ஒன்றும் சரிவரவில்லை.

சரி இதுக்கு மேல கட்டாய கல்யாணம் பண்ணிவச்சா சிக்கல் தான் ஏற்படும் என்று உடனே கல்யாணத்தை நிறுத்துமாறு போதகர் சொல்லிவிட்டார். உடனே மாப்பிள்ளை வீட்டாரும்,பெண் வீட்டாரும் வாக்குவாதம் செய்ய ஆரம்பித்தனர்.பிறகு அங்கிருந்தவர்கள் அவர்களை ஓரளவு சமாதானம் செய்தனர்.