விடிந்தால் கல்யாணம்! முதல் நாள் காதல் ஜோடி செய்த விபரீத செயல்! பிறகு அரங்கேறிய பரிதாபம்!

திருமணத்திற்கு முன் எடுத்த விபரீத முடிவால் காதல் ஜோடி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


 பிரேசில் நாட்டைச் சேர்ந்த விக்டோரியா மற்றும் marley ஆகிய இருவரும் நீண்ட வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் இருவருக்கும் ஆகஸ்ட் 14ம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

இதனை கொண்டாடும் விதமாக இருவரும் வானில் பறக்கும் சாகசத்தை மேற்கொள்ள விரும்பினார். அதன்படி மேற்கு பிரேசிலின் கால்டாக்ஸ் பகுதியிலிருந்து வானில் பறக்கும் சாகசத்தை தொடங்கினர்.

அங்கிருந்து பறக்க ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே தங்களது மொபைல் போனில் வீடியோ எடுத்து நண்பர்களுடன் வாட்ஸ் அப்பில் பகிர்ந்து கொண்டனர். பின் 42 மைல் தூரத்தில் இருக்கக் கூடிய firesdurio வில் திருமணத்திற்கு முன் கொண்டாடக்கூடிய பேச்சிலர் பார்ட்டியை சிறப்பாக கொண்டாடி விட்டு மீண்டும் அங்கிருந்து திரும்ப பிரேசில்யாவிற்கு பயணத்தை தொடங்கினார்.

இதற்கு முன் பல முறை இதுபோன்ற சாகசங்களை நிகழ்த்திய போது சரியான நேரத்திற்கு அவர்கள் இலக்கை முடித்ததே இல்லை. அதே போன்று இம்முறையும் அவர்கள் சரியான நேரத்தில் ப்ரெசிலியாவிற்கு வராததால் அவரது நண்பர்கள் அதனை அலட்சியப் படுத்தி உள்ளனர். பின்  நீண்ட நேரமாகியும் அவர்கள் வராததால் தேடுதல் பணியில் நண்பர்களும் மீட்பு குழுக்களும் ஈடுபட்டனர்.

இதை அடுத்து மறுநாள் காலையில் இருவரும் பிரேசிலின் உள்ள காட்டுப் பகுதியில் சடலமாக மீட்கப்பட்டனர். இவர்களது திருமணத்திற்கு மகிழ்ச்சியாக வந்த உறவினர்கள் அனைவரும் அவர்களது இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளும்  சூழ்நிலை ஏற்பட்டது. இது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதை அடுத்து ஆகஸ்ட் 15 ஆம் தேதி அன்று இருவரது உடலும் ஒரே கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது.