விபத்தில் சிக்கி ஒற்றைக் காலை இழந்த வருங்கால கணவன்! திருமணம் செய்து வைக்க மறுத்ததால் இளம் பெண் எடுத்த பகீர் முடிவு! நெகிழ்ச்சி சம்பவம்!

புதுவையில் திருமணம் நடைபெற ஒரு மாதம் இருக்கும் நிலையில் மாயமான மணப்பெண்ணை பெற்றோரின் புகாரில் போலீசார் தேடிவருகின்றனர்.


புதுவை சாரம் அய்யனார் நகரை சேர்ந்த விஜயகுமார் என்பவரின் மகள் பிரகதி பிரபல ஜவுளிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். அவருக்கு சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. நிச்சயம் செய்த பின்னர் அந்த மாப்பிள்ளையிடம் பிரகதி செல்போனில் பேசி பழகி வந்ததாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் சாலை விபத்து ஒன்றில், மாப்பிள்ளை ஒரு காலை இழந்துவிட்டார். இதையடுத்து காலை இழந்த மாப்பிள்ளைக்கு பிரகதியை திருமணம் செய்து வைக்க பெற்றோர் சம்மதிக்கவில்லை. பிரகதிக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்துள்ளனர். ஆனால் ஏற்கனவே நிச்சயம் செய்த மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள்வதில் உறுதியாக இருந்தார் பிரகதி. ஆனாலும் பிரகதியின் பெற்றோர் தங்களது முடிவில் விடாப்பிடியாக இருந்தனர்.

இந்த நிலையில் வழக்கம் போல ஜவுளிகடைக்கு வேலைக்கு சென்ற பிரகதி இரவு வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து பல இடங்களில் பிரகதியை தேடிய பெற்றோர் கடைசியாக கோரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பெற்றோரின் எதிர்ப்பை மீறி நிச்சயம் செய்யப்பட்ட மாப்பிள்ளையை பிரகதி கரம் பிடிக்க இருக்கலாம் என்று கோணத்திலும் போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.