ஆக்ரோசமாக சண்டையிடும் நாய்கள்..! மோதலில் உயிரிழந்தால் சுடச்சுட நாய் இறைச்சி சமைத்துச் சாப்பிடும் கொடூரம்! எங்கு தெரியுமா?

சட்டத்திற்குப் புறம்பான நாய் சண்டை போட்டி நடத்திய பலரை பிரேசில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அப்பகுதியில் நாய் பார்பிக்யூ இருந்ததும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.


பிரேசில் நாட்டின் சாவோ பாவுலோ பகுதியில் உள்ள ஒரு பண்ணையில் சட்டத்திற்குப் புறம்பான முறையில் நாய்ச் சண்டை நடத்தப்பட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து ஆயுதங்களுடன் நுழைந்த காவல்துறையினர் அங்கிருந்த மருத்துவர் மற்றும் கால்நடை மருத்துவர் என மொத்தம் 49 பேரை கைது செய்திருக்கின்றனர்.

இந்த சண்டையில் சில சிறுவர்களும் ஈடுபட்டிருந்த தகவல்கள் தெரியவந்துள்ளன. மேலும் இந்த நாய் சண்டைக்கு உலகெங்கிலும் இருந்து பலர் பந்தயம் கட்டி இருக்கும் ஆவணங்கள் போலீசாருக்கு சிக்கி இருக்கின்றன. சுமார் பத்திற்கும் மேற்பட்ட நாய்கள் கடுமையாக காயம் ஏற்பட்ட நிலையில் அப்பகுதியில் இருந்து மீட்டு எடுக்கப்பட்டன. 

மேலும் அப்பகுதியில் வேறு ஏதும் ஆதாரம் கிடைக்குமா? என போலீசார் தேடி பார்த்த போது, நாய் சண்டையில் ஈடுபட்டவர்களுக்கு பரிமாறுவதற்கு வைக்கப்பட்டிருந்த சண்டையில் இறந்த நாய்களின் பார்பிகியூ கிடைத்துள்ளது.

சாதாரண விளையாட்டு என நினைத்த காவல்துறையினருக்கு அங்கு கிடைத்த தகவல்கள் பல திடுக்கிடும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர்.