சபாஷ் ரஜினி! அமித்ஷாவுக்கு ஒரு சலாம்! தமிழனுக்கு ஒரு ஜால்ரா!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பிரமாதமான நடிகர் என்பது எல்லோருக்கும் தெரியும். அவருக்கு பிரமாதமாக பேசவும் தெரியும் என்று நிரூபித்துக் காட்டிவிட்டார். தமிழகம் எங்கும் இந்தி மொழி குறித்து அமித்ஷா பேசிய விவகாரம்தான் பற்றி எரிகிறது.


இந்த நிலையில் இன்று சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் ரஜினிகாந்த். அப்போது இந்தி விவகாரம் குறித்து அமித் ஷாவின் கருத்து தொடர்பாக பதிலளித்தார்.

“எந்த நாடாக இருந்தாலும் பொதுவான மொழி இருந்தால் அந்த நாட்டின் முன்னேற்றம், ஒற்றுமை, வளர்ச்சிக்கு அது நல்லதாக இருக்கும்...’’ என்று அமித்ஷாவுக்கு ஆதரவாக முதலில் பேசி முடித்தார். அதன்பிறகு, ‘‘ஆனால், துரதிருஷ்ட வசமாக நமது நாட்டில் பொதுமொழியைக் கொண்டுவர முடியாது.

இந்தியாவில் எந்த மொழியையும் திணிக்க முடியாது. முக்கியமாக இந்தியைத் திணித்தால் தமிழகத்தில், தென்னிந்தியாவில் மட்டுமல்ல வடமாநிலங்களில் கூட அதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்’’ என்று தமிழர்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார்.

அதேபோன்று பேனர் விவகாரம் குறித்து கேட்கப்பட்டது. அப்போது, ‘‘தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுவதும் பேனர் வைப்பதை தடை செய்ய வேண்டும்’’ என்று கோரிக்கை வைத்தார். பேசுற பேச்சைப் பார்த்தா அரசியலுக்குள்ள வந்திடுவார் போல தெரியுதே.