அரசு மருத்துவமனையில் அடுத்தடுத்து 56 குழந்தைகள் பலி! மாநிலத்தையே உலுக்கும் புதுக் காய்ச்சல்!

புது ரக மூளைக் காய்ச்சலுக்கு எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள குழந்தைகள் பலியான வண்ணம் இருப்பது அந்த மக்கள் இடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.


பீகாரில் கடந்த ஜனவரி மாதம் துவங்கி இந்த நோயின் தாக்கம் இருந்து வருவதால், அதில்  11 பேர் உயிரிழந்திருந்தனர். ஆனால் இப்போது திடீரென இதன் தாக்கம் மேலும் அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்காளாக குறிப்பாக குழந்தைகளின் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது.

முசாபர்பூர், கயா ஆகிய மாவட்டங்களில் நோய் தாக்கம் அதிக அளவில் உள்ளதில் நேற்று முந்தினம் வரை 41 குழந்தைகள் பலியாகினர் இந்நிலையில் முசாபர்பூர் நகரில் இதுவரை 45  குழந்தைகள் மூளைக்காய்சலால் பலியாகி உள்ள நிலையில் அங்குள்ள ஸ்ரீகிருஷ்ணா மருத்துவமனை கல்லூரியில் திடீர் காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டிருந்த 133 குழந்தைகளுக்கு மூளை காய்ச்சல் இருப்பது தெரியவந்துள்ளது.

ரத்தத்தில் குளுக்கோஸ் குறைவு நோயால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பீகாரில் 12 மாவட்டங்களிலும் இந்த காய்ச்சல் தாக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.அக்யூட் என்சபிலிட்டிஸ் சிண்ட்ரோம்’ மற்றும் ‘ஜப்பான் என்சபிலிட்டிஸ்’ என 2 வகையான மூளைக்காய்ச்சல் பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழப்பு மக்களை பீதிக்குள்ளாக்கி இருக்கிறது. இதைத் தொடர்ந்து நிலைமையை ஆராய்வதற்காக மத்திய நிபுணர் குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.