குளிர்பானத்தில் மயக்க மருந்து! 1 மணி நேரம் உல்லாசம்! பிரேசில் மாணவிக்கு இந்தியாவில் நேர்ந்த விபரீதம்!

மும்பை: பிரேசில் மாணவியை பலாத்காரம் செய்த கஃபே பாரடே குடியிருப்பு சங்கத் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


மும்பையில் செயல்படும் பிரபலமான குடியிருப்பு சங்கங்களில், கஃபே பாரடே ரெசிடன்ட்ஸ் அசோஷியேசனும் ஒன்றாகும். இதன் தலைவராக பத்மாகர் நந்தேகார் (52 வயது) என்பவர் உள்ளார். இந்நிலையில், இவர், பிரேசிலை சேர்ந்த  19 வயது மாணவி, இந்தியா வந்திருந்தபோது, பலாத்காரம் செய்ததாக, புகார் எழுந்துள்ளது. இதன்பேரில், போலீசார் அவரை கைது செய்துள்ளனர். 

பிரேசிலை சேர்ந்த அந்த மாணவி, கடந்த ஆண்டில், தனது படிப்பு தொடர்பான ஆராய்ச்சிக்காக, இந்தியா வந்துள்ளார். அவர், நந்தேகார் வீட்டில் 6 மாதங்களாக தங்கியிருந்துள்ளார். பின்னர், சென்ற மார்ச் மாதம், பாந்த்ரா பகுதிக்கு, தெரிந்தவர்களின் வீட்டிற்கு, இடம்மாறியுள்ளார். இதில், நந்தேகார் உடன் தங்கியிருந்தபோது, ஒருமுறை ஐந்து நட்சத்திர ஓட்டலுக்கு, அவர் விருந்துக்காக அழைத்துச் சென்றார் என்றும், அப்போது மயக்க மருந்து கலந்துகொடுத்து, அதே ஒட்டலில் வைத்து தன்னை நந்தேகார் பலாத்காரம் செய்துவிட்டார் என்றும் அந்த மாணவி, தனது புகாரில் கூறியுள்ளார். 

தனக்கு பாதுகாவலராக இருந்தவரே இப்படி செய்ததால் கடும் மன உளைச்சல் அடைந்ததாகவும், இதன் பிறகே, மற்றொரு இடத்திற்கு, குடிபெயர நேரிட்டது எனவும் அந்த மாணவி குறிப்பிட்டுள்ளார். இதையேற்று, எஃப்ஐஆர் பதிவு செய்த போலீசார், பத்மாகர் நந்தேகாரை கைது செய்து, மே 24ம் தேதி வரை கஸ்டடியில் வைத்து விசாரிக்கின்றனர்.

மும்பையில் செல்வாக்கு மிக்க நபர்களில் ஒருவரான பத்மாகர் நந்தேகாரின் கைது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.