பொள்ளாச்சி : இருசக்கர வாகனத்தை ஓட்டி விபத்து ஏற்படுத்தியதால் அந்த மாணவனுக்கு நீதிமன்றம் நூதன தண்டணை கொடுத்துள்ளது.
17 வயதில் டூவீலர் ஓட்டி விபத்து! சிறுவனுக்கு நீதிமன்றம் கொடுத்த விநோத தண்டனை! பரிதாபம் தான் போங்க!

பொள்ளாச்சி அருகே கோட்டூரைச் சேர்ந்த மாணவன்(17)கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வால்பாறையில் உள்ள ஜெஜெ பகுதியில் விபத்தை ஏற்படுத்தியுள்ளார். மேலும் இவர் ஓட்டுனர் உரிமம் இன்றி இருசக்கர வாகனத்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதால் அந்த மாணவணுக்கு நீதிமன்றம் நூதன தண்டணை விதித்துள்ளது.
எனினும் மற்றொரு வாகனத்தில் சென்ற மணிகண்டன் என்பவருக்கு பலத்த அடி ஏற்பட்டுள்ளது.இதை அறிந்த போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.மேலும் இது தொடர்பான வழக்கு கோவையில் உள்ள இளஞ்சிறார் சீர்திருத்த மன்றத்தில் நடைபெற்றது.
இதுகுறித்து வழக்கை விசாரித்த நீதிபதி,10 நாட்களுக்கு பள்ளி முடிந்து மாலையில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து வால்பாறையில் உள்ள நா.மூ சங்கம் சந்திப்பு பகுதியில் போக்குவரத்தை ஒழுங்கு படுத்தும் பணியில் அந்த மாணவர் ஈடுபட்டுள்ளார்.