காதலியை கடத்தி கதற கதற கற்பழித்த காதலன்..! பிறகு தாயுடன் இணைந்து அரங்கேற்றிய பயங்கரம்! நாட்டையே உலுக்கிய இன்னொரு சம்பவம்!

அகர்தலா: 17 வயது சிறுமியை வன்புணர்வு செய்து எரித்துக் கொன்ற ஆண் நண்பரை போலீசார் கைது செய்தனர்.


திரிபுரா மாநிலம், சாந்திர்பஜார் பகுதியில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. இப்பகுதியை சேர்ந்த 17 வயது இளம்பெண்ணை,  அவரது ஆண் நண்பர் காதலிப்பதாகக் கூறி மிரட்டி வந்துள்ளார். அந்த நபரின் பெயர் அஜோய் ருத்ராபால். இதன்படி, தீபாவளி பண்டிகையின்போது, குறிப்பிட்ட இளம்பெண்ணை அஜோய் கடத்திச் சென்றுவிட்டாராம். பிறகு, பெண்ணின் பெற்றோர் அஜோயிடம் பேசி பணம் கொடுத்து, அவரை மீட்டுவந்துள்ளனர்.  

இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு மீண்டும் அஜோய், அப்பெண்ணை கடத்திச் சென்று, தனது வீட்டில் அடைத்து வைத்திருக்கிறார். பிறகு, தனது நண்பர்களுடன் சேர்ந்து காதலியை கூட்டாக பலாத்காரம் செய்த அஜோய், ரூ.50 ஆயிரம் பணம் கொடுத்தால்தான் விடுவிப்பேன் என்று, பெண்ணின் பெற்றோரிடம் பேரம் பேசியிருக்கிறார். இதுபற்றி பெண்ணின் பெற்றோர் போலீசில் தகவல் கொடுத்தும் உரிய நடவடிக்கை இல்லை எனக் கூறப்படுகிறது.  

பிறகு, ரூ.17,000 மட்டுமே தங்களால் தர முடியும் என, பெண்ணின் பெற்றோர் தெரிவிக்கவே, ஆத்திரமடைந்த அஜோய், தனது தாயுடன் சேர்ந்து, தீ வைத்து இளம்பெண்ணை கொளுத்தியுள்ளார். உடனடியாக, அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, 90 சதவீத தீக்காயங்களுடன் போராடிய இளம்பெண், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சாகும் முன், சாவுக்கு காரணம் அஜோய் மற்றும் நண்பர்கள், குடும்பத்தினர்தான் என வாக்குமூலம் அளித்திருக்கிறார். இதன் அடிப்படையில், போலீசார் அவர்களை கைது செய்தனர்.