நள்ளிரவு! தனிமை! கண்டு கொள்ளாமல் உறங்கிய ஆண் நண்பன்! ஆத்திரத்தில் திருமணமான பெண் செய்த கொடூரம்!

அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் உல்லாசத்துக்கு அழைத்துவிட்டு உடறுவு கொள்ளாமல் தூங்கி விட்ட கள்ளக் காதலன் மீது பெட்ரோல் ஊற்றி கொலை செய்ய முயன்றுள்ளார் பெண் ஒருவர்.


அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கும் அதே மாகாணத்தை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் முறையற்ற உறவு இருந்துள்ளது. சில தினங்களுக்கு முன்னர் கள்ளக் காதலனை அழைத்த அந்தப் பெண் அன்று இரவு முழுவதும் உல்லாசமாக இருக்கலாம் எனக் கூறியுள்ளார்.

பெண் கூறியதை அடுத்து அங்கு வந்த கள்ளக் காதலன் ரகசிய சினேகிதியுடன் உடலுறவு கொள்ளாமல் திடீரென படுத்து தூங்கி விட்டார். இதனால் ஏங்கித் தவித்த அந்த பெண் அவரை பல முறை எழுப்பி பார்த்தும் மிகவும் அயர்ச்சியில் இருந்த அந்த காதலன் எழுந்திருக்கவே இல்லை. நள்ளிரவு ஆகிவிட்டதாலும் உடல் சூட்டை தணிக்க முடியாமலும் தவித்து வந்த அந்தப் பெண் வீட்டிலிருந்து வெளியேறி நடக்கத் தொடங்கினார்.

நீண்ட நேரம் சாலையின் இருபுறமும் ஆத்திரம் தீர நடந்த சென்ற அந்தப் பெண் தன்னுடன் உல்லாசத்துக்கு வராதவன் உயிரோடு இருக்கக் கூடாது என அருகில் இருந்து பெட்ரோல் நிலையத்திற்கு சென்றார். அங்கு ஒரு கேன் பெட்ரோல் வாங்கி வந்து கள்ளக் காதலன் மெய் மறந்து உறங்கிக் கொண்டிருந்த மரத்தில் செய்யப்பட்ட வீட்டின் மீது தீ வைத்து கொளுத்தி உள்ளார்.

மர வீடு என்பதால் வீடு மள மளவென எரிய ஆரம்பித்தது. ஆழ்ந்த நித்திரையில் இருந்த கள்ளக் காதலுனுக்கு ஏதோ கருகும் வாசனை வந்துள்ளது. பின்னர் மெல்ல கண் விழித்து பார்த்த போது வீடு கொஞ்சம் கொஞ்சமாக எரிந்து கொண்டிருப்பதை பார்த்து அலறி அடித்து எழுந்தார். தன்னை சுற்றிலும் தீ எரிந்து கொண்டிருந்ததால் பின்னர் ஒருவழியாக ஜன்னலை உடைத்துக் கொண்டு தப்பி ஓடினார்.

சம்பவத்தை கேள்விப்பட்டு விரைந்து வந்த காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்தனர். மேலும் கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்ட பெண் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.

கள்ளக் காதலுக்கு இடையூறாக இருப்பது கணவனாகோவ, பெற்ற குழந்தையாகவோ, சகோதரனாகவோ இருந்தால் நம்மூரில் செய்வது போல் தீர்த்துக் கட்டலாம். கள்ளக்காதலனே தடையாக இருந்தால் என்ன செய்வது அவனை பரோலோகம் அனுப்புவது நியாயம்தானே என நாங்கள் கூறவில்லை. நெட்டிசன்கள் கூறுகிறார்கள்.