கேரளாவில் திருமணம் செய்து கொள்வதாக கூறி காதலியை அனுபவித்துவிட்டு தப்பிய நபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்
ஆணழகனிடம் மயங்கிய எம்பிபிஎஸ் மாணவி! ஆசை தீர அனுபவித்துவிட்டு ராகுல் செய்த பகீர் செயல்!

திருவனந்தபுரம் அருகே உள்ள வர்க்கலா பகுதியை சேர்ந்த ராகுல் என்பவர் பாடி பில்டர் ஆவார். இவரின் கடுமையான முயற்சி மற்றும் உடற்பயிற்சியால், பல்வேறு இடங்களில் நடந்த போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகள் வென்றுள்ளார். மேலும் 2018ம் ஆண்டு கொல்லத்தில் நடைபெற்ற ஆணழகன் போட்டியிலும் கலந்து கொண்டு தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி மிஸ்டர் கொல்லம் பட்டம் பெற்றார் ராகுல்.
பெங்களூரில் மருத்துவம் படிக்கும் மாணவி ஒருவர் ராகுல் வீட்டருகே வசித்து வந்துள்ளார். அவர் தற்போது பெங்களூருவில் உள்ள மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படித்து வருகிறார். இந்நிலையில் இவர்களுக்கு இடையே காதல் மலர, பல இடங்களில் சுற்றித் திரிந்துள்ளனர். மேலும் ஓட்டல்களில் அறை எடுத்து தங்கி உல்லாசமாகவும் இருந்து வந்துள்ளனர்.
மேலும் அந்த பெண்ணிடம் பணம், மற்றும் நகையும் ராகுல் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த பெண்ணிடம் பேசுவதை ராகுல் தவிர்த்து வந்தார். பலமுறை அந்த பெண் செல்போனில் தொடர்பு கொண்டும் சிக்காமல் இருந்துள்ளார் ராகுல். இதற்கிடையே கடந்த வாரம் ராகுல் பெண்ணிடம் சொல்லாமல் கொல்லாமல் கத்தாருக்கு ஓடிவிட்டார்.
அப்போதுதான் ராகுல் தன்னிடம் பழகியது காதலுக்காக அல்ல, காமத்திற்காக என்பதை பெண் புரிந்து கொண்டார். இது தொடர்பாக காவல் நிலையத்தை பெண் புகார தர ராகுல் மீது வழக்குப்பதிவு செய்திருந்தனர். தற்போது விடுமுறைக்காக கத்தாரில் இருந்து சொந்த ஊருக்கு வந்த ராகுலை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்து சிறையில் அடைத்தனர்