நடுரோட்டில் காதலனுக்கு 52 முறை கன்னத்தில் பளார் விட்ட காதலி! பதற வைக்கும் காரணம்! வைரல் வீடியோ!

காதலனை அவரது காதலி 52 முறை கன்னத்தில் அறைந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


சீனாவில்தான் இந்த வேடிக்கை சம்பவம் நிகழ்ந்துள்ளது. சீன நாட்டின் காதலர் தினத்தில் தனக்கு ஒரு ஐஃபோன் வாங்கித் தரும்படி, காதலனிடம் காதலி கேட்டுள்ளார். அவரும் வாங்கித் தருவதாகக் கூறியிருந்தார். ஆனால், எதிர்பாராவிதமாக, அவரால் காதலிக்கு ஐஃபோன் வாங்கித் தர முடியாமல் போய்விட்டதாம்.

இதனால், ஆத்திரமடைந்த காதலி, தனது காதலன் என்றும் பாராமல் நடுத்தெருவில் நிறுத்தி, 52 முறை கன்னத்தில் ஓங்கி அறைந்தார். அவர் அடிக்க அடிக்க, காதலன் எதுவும் செய்யாமல் அடிவாங்கியபடி அப்படியே நின்றுள்ளார். இதனை அந்த வழியே சென்ற நபர்கள் படம் பிடித்து இணையத்தில் பகிர்ந்துள்ளனர். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது. 

இதில் வேதனை என்னவெனில், தன்னை அடித்த காதலியை போலீசார் வந்து கைது செய்தபோது, அந்த காதலன் தடுத்துள்ளார். தனது காதலி வீண் சிக்கலில் சிக்குவதை விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்ததோடு, போலீசில் புகார் அளிக்கவும் மறுத்துவிட்டாராம். காதல் மனிதனை என்ன பாடுபடுத்தும் என்பதற்கு, இந்த வீடியோ நல்ல உதாரணம்.