காதலி முன்னிலையில் காதலன் சுட்டுக் கொலை! தருமபுரி பயங்கரம்! பதற வைக்கும் காரணம்!

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருகே காதலி முன்னிலையில் காதலன் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ஒகேனக்கல் ஜருகு பகுதியை சேர்ந்தவர் முனுசாமி. இவர் அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். முனுசாமி வீட்டிற்கு பள்ளி விடுமுறையையொட்டி ஈரோட்டில் இருந்து உறவுக்கார பெண் ஒருவர் வந்துள்ளார். 

முனுசாமியும் – அந்த பெண்மணியும் காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் முனுசாமியுடன் இளம் பெண்  இருசக்கர வாகனத்தில் ஒகேனக்கல் அருவிப் பகுதிக்கு சென்றுள்ளார்.

தொடர்ந்து பண்ணப்பட்டி அருகே வனப்பகுதியில் சாலையோரமாக நின்று  இருவரும் பேசி கொண்டிருந்தனர். அப்போது அங்கு   வந்த சிலர் முனுசாமியுடன் பேசியுள்ளனர். இதனை தொடர்ந்து அங்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது மர்ம நபர்களில் ஒருவர் திடீரென தான் வைத்திருந்த துப்பாக்கியால் முனுசாமியை சுட்டுள்ளார். இதில் சம்பவ இடத்திலேய முனுசாமி பலியானார். இதனை பார்த்து அந்த பெண் அலறி ஓடியுள்ளார்