காதலியுடன் உல்லாசமாக இருக்க வீட்டை வாடகைக்கு எடுத்த காதலன்! அந்த வீட்டிலேயே சடலமாக கிடந்த திடுக் சம்பவம்!

கடந்த சனிக்கிழமை இரவு பள்ளிக்கரணையில் உள்ள தனது காதலியின் வீட்டில் பிணமாக கிடந்த காதலன்.


சென்னை பள்ளிக்கரணையில் 27 வயது மதிக்கத்தக்க கார்த்திக் எனும் இளைஞர் வள்ளுவர் நகர் சித்தாலப்பாக்கம் பகுதியில் வசித்து ஓட்டுனராக பணியாற்றி வந்துள்ளார். இவர் அந்த பகுதியில் ராஜேஸ்வரி 24  என்னும் பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

ராஜேஸ்வரி சென்னை தரமணியில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். கார்த்திக் ராஜேஸ்வரிக்கு 2500 ரூபாய் வாடகையில் எழில் நகர் பகுதியில் வீடு ஒன்று எடுத்து  தங்க வைத்தார். கார்த்திக் அடிக்கடி ராஜேஸ்வரி வீட்டிற்கு சென்று அவருக்கு தேவையான உதவிகளையும் செய்து வந்தார். 

பின்னர் அந்த வீட்டில் ராஜேஸ்வரி வாரம் இரண்டு நாட்கள் மட்டுமே தங்குவார் மீதி நாட்களில் தனது தோழிகளுடன் தங்கியிருப்பார். கடந்த சனிக்கிழமை ராஜேஸ்வரி தனது வீட்டிற்கு சென்றபோது வீட்டின் முன் கதவு திறந்து இருப்பதைக்கண்டு உள்ளே கார்த்திக் தான் இருப்பார் அவரிடம் வீட்டின் இன்னொரு சாவி உள்ளது என உள்ளே சென்று பார்த்தால் அப்போது அவளுக்கு ஒரு  பேரதிர்ச்சி காத்திருந்தது.

அங்கு ரத்தவெள்ளத்தில் கார்த்திக் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ந்த ராஜேஸ்வரி அருகிலுள்ள போலீசாரிடம் இதனை தெரிவித்தார். பின்னர் அவரது உடல் போஸ்ட்மாட்டத்திற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ராஜேஸ்வரி  கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் கார்த்தியிடம் இருந்து வந்த எந்த ஒரு அழைப்பையும் எடுக்கவில்லை.  அதனால் ராஜேஸ்வரி மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது அவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

இந்த நிலையில் கார்த்திக்கின் இடுப்பு மற்றும் கை கால்களில் சிறு சிறு காயங்கள் இருப்பது தெரியவந்தது . இந்த கொலை பற்றி மேலும் விபரங்கள் போஸ்ட்மார்ட்டம் முடிந்த பிறகே வெளியிடப்படும் என காவல்துறை தரப்பில் கூறியுள்ளனர். இதனிடையே இந்த வீட்டை காதலியுடன் உல்லாசமாக இருக்கவே கார்த்தி வாடகைக்கு எடுத்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

தேவையான போது இருவரும் அந்த வீட்டிற்கு வருவார்கள் என்றும் பெரும்பாலும் அந்த வீடு பூட்டியே கிடக்கும் என்றும் அக்கம் பக்கத்தினர் கூறுகின்றனர்.