இரவு விருந்துக்கு காதலன் விதித்த 12 பகீர் நிபந்தனைகள்! பிறகு காதலனுக்கு ஏற்பட்ட விபரீதம்!

லண்டன்: நைட் பார்ட்டிக்குச் சென்ற காதலிக்கு, காதலன் 12 நிபந்தனைகள் போட்ட சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.


இங்கிலாந்தின் வேக்ஃபீல்ட் பகுதியை சேர்ந்தவர் ஜோ ஸ்கோல்ஃபீல்ட். இவர் அண்மையில் இரவு விருந்திற்குச் சென்றுள்ளார். இதுதொடர்பான சில வீடியோக்களை தனது காதலனுக்கு பகிர்ந்துள்ளார்.

ஆனால், அந்த நபரோ, இதைப் பார்த்துவிட்டு, திடீரென 12 புதிய நிபந்தனைகளை ஜோவுக்கு விதித்துள்ளார். இதைச் சரியாக பின்பற்றிவிட்டு, அவரும் வீடு திரும்பியுள்ளார். 

ஆனால், அதற்குப் பின்தான் நிகழ்ந்ததுதான் விபரீதம். அட்வைஸ் சொன்ன காதலன் இந்த தவறையெல்லாம் செய்திருப்பதை ஜோ கண்டுபிடித்தார். உடனே, இதுபற்றி ட்விட்டரில் பதிவிட்ட அவர், தனது முன்னாள் காதலனின் நிபந்தனைகளை பாரீர், என தகவல் பகிர்ந்தார். அதாவது, தனது காதலனை விடிந்ததும் அவர் மாற்றிவிட்டார். 

காதலன் என்ற பெயரில் ஒரு மனநோயாளியிடம் இவ்வளவு நாட்களாக பழக்கம் வைத்திருந்தேன், என்றும் கூறி ஜோ வருத்தம் தெரிவித்துள்ளார். தனது காதலன் விதித்த நிபந்தனைகளை ஸ்கிரீன்ஷாட் எடுத்து ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இதற்குப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.