10 வருடங்களாக ஆண் குழந்தையே பிறக்காத விநோத கிராமம்! ஒன்லி பெண் குழந்தைகள் தான்!

கள்ளிப்பால் கலாச்சாரம், மேலைநாடுகளுக்கும் பரவியதா? ஆண்குழந்தையே பிறக்காத அதிசய கிராமம்.


ஐரோப்பாவின் போலந்து நாட்டில் கடந்த 10 ஆண்டுகளாக ஆண் குழந்தைகளே பிறக்காத கிராம் சர்வதேச அளவில் திரும்பி பார்க்க வைத்துள்ளது. ஐரோப்பா நாடுகளில் ஒன்றான போலந்தில் மியெஜ்சே என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் கடந்த 10 ஆண்டுகளில் ஒரு ஆண் குழந்தை கூட பிறக்கவில்லை என கூறப்படுகிறது.

தொடர்ச்சியாக பெண் குழந்தைகளாகவே பிறப்பதால் அந்த கிராம மக்கள் மட்டும் அல்ல சர்வதேச அளவில் இந்த விஷயம் பெரிதாக பார்க்கப்படுகிறது. இதற்குக் காரணம் அந்த கிராமத்தின் சூழ்நிலை, மரபணு, உணவுப் பழக்கம் காரணமாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

மாறாக போலந்தில் 2017-ல் பிறந்த குழந்தைகளில் 1.96 லட்சம் பெண் குழந்தைகளுக்கு 2.07 லட்சம் ஆண் குழந்தைகளாக பிறப்பு விகிதம் இருந்ததை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளது.

ஐரோப்பிய நாடுகளான நார்வே, சுவீடன், டென்மார்க்,  பின்லாந்து மற்றும் ஐஸ்லாந்து நாடுகளில் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. அதற்குக் காரணம் அங்கு மக்கள் தொகை குறைவாக இருப்பதும்தான்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நார்வே பிரதமர் எர்னா சோல்பெர்க் நாட்டு மக்களுக்கு விடுத்த வேண்டுகோளில் நாட்டின் எதிர்காலம் கருதி பெற்றோர்கள் அதிக அளவில் குழந்தைகள் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். நமது நாட்டில் பிறப்பு விகிதம் குறைவாக இருந்தால் எதிர்காலங்களில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்று கூறியிருந்தார்.

மக்கள் தொகை பெருக்கத்தில் பிறப்பு விகிதம் நேரடியான மாறுதலை உண்டுபண்ணும். பிறப்பு விகித அதிகரிப்பால், மக்கள் தொகையிலும் அதிகமான பெருக்கத்தையே காணமுடியும். பிறப்பு விகிதம் பின்வரும் காரணிகளுடன் தொடர்பு கொண்டுள்ளது.

அறியாமை, இள வயது திருமணம், அதிகமான குழந்தை பிறப்புகள், பழைய சமூக பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள், பரவலாக நிலவும் படிப்பறிவு இல்லா நிலை அதிகரிப்பு மற்றும் பிறப்பு கட்டுப்பாடு முறைகளின் அறியாமை அதிகரிப்பு, ஆகியவற்றின் மூலமாக பிறப்பு விகிதம் உயர்ந்து, மக்கள் தொகையானது பெருமளவுக்கு அதிகரிக்கிறது.

சமூக விழிப்புணர்வு மற்றும் மக்களிடையே பரவிக் காணப்படும் கல்வி அறிவானது, திருமண வயதை அதிகரிக்க உதவுகிறது. குடும்ப கட்டுபாடுகள் பற்றிய அறிவு பெருக்கம், குடும்ப நலத்திற்காக பிறப்பு வீதம் குறைவு மற்றும் குழந்தை பிறப்பு அதிகரிப்பு குறைவு, போன்றவை மூலமாக பிறப்பு விகிதம் குறைகின்றது.

நம்மூரில் பெண் குழந்தைகள் பிறந்தால் கள்ளிப்பால் ஊற்றுவது போல் போலந்தில் ஆண் குழந்தைகளுக்கு கள்ளிப்பால் ஊற்றுகிறார்களா என கேட்காதீர்கள்.