மண்ணுக்குள் உயிரோடு புதைக்கப்பட்டிருந்த பச்சிளம் குழந்தை..! மோப்ப சக்தியால் கண்டுபிடித்த நாய்! அதிர வைக்கும் திக் திக் சம்பவம்!

சீனாவில் குழந்தை இறந்துவிட்டதாக நினைத்து நல்லடக்கம் செய்யப்பட்ட நிலையில் நாயின் மோப்ப சக்தியால்அது உயிரோடு இருப்பது தெரியவந்தது.


சீனாவை சேர்ந்த ஜியோ மற்றும் ஷாங்க்டாங்க ஆகியோர் கடந்த 21ம் தேதியன்று லாயுவுக்கு அருகில் தொலைதூர மலைகளில் காளாண்களை தேடும் பணியில் ஈடுட்டுக் கொண்டிருந்தனர். 

அப்போது ஒரு நாய் நீண்ட நேரமாக தரையை தனது கால்களால் சுரண்டிக் கொண்டே இருந்தது. இதை பார்த்த இவர்கள் அங்கு ஏதோ மர்மம் இருக்கிறது என அப்பகுதியில் பள்ளம் தோண்டினர். அப்போது ஒரு அட்டை பெட்டி கிடைக்கப்பெற்றது.

அந்த அட்டை பெட்டியை திறந்து பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தனர். அந்த அட்டை பெட்டியில் ஒரு குழந்தை உயிரோடு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் குழந்தை மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தைக்கு ரத்த சோகை, மஞ்சள் காமாலை நோய் இருப்பதை கண்டுபிடித்தனர்.

இதுகுறித்து போலீஸ் மேற்கொண்ட விசாரணையில் கடுமையான நுரையிரல் தொற்றுடன் போராடி கொண்டிருந்த குழந்தை கடந்த 20ம் தேதி இறந்துவிட்டதாக கருதி நல்லடக்கம் செய்து விட்டதாக தெரிவித்தனர்.

ஆனாலும் ஒரு குழந்தை இறந்தது என்பதை மருத்துவர்தான் உறுதி செய்ய வேண்டும். குழந்தை மூச்சு விடுவது கூடவா பெற்றோருக்கு தெரியாமல் சென்றது. ஒருவேளை குழந்தை நோயால் அவதிப்படுவதால் கொல்ல மனம் இல்லாமல் அப்படியே புதைத்துவிட்டார்களா அல்லது வேறு ஏதேனும் காரணமாக என போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.