பண மழையில் இந்திய வீரர்கள்!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடேயேயான 4 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா வென்று வரலாற்று சாதனை படைத்தது. இந்தியா அணி ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரை ஆஸ்திரேலியாவில் வெல்வது இதுவே முதல் முறையாகும் .


இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் இந்த தொடரில் பங்கேற்ற வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் மற்றும் உதவி ஊழியர்கள் அனைவருக்கும் பிசிசிஐ ஊக்கத்தொகையை பரிசாக அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பின்படி அணியில் விளையாடிய வீரர்களுக்கு ஒரு போட்டியின் வீதம் 25 லட்சம் ஊக்கத்தொகையாக அறிவித்துள்ளது. மேலும் களமிறங்காத வீரர்களுக்கு 7.5 லட்சமும் ஊக்கத்தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பயிற்சியாளர்களுக்கு 25 லட்சமும் ஊக்கத்தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு இந்திய வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களை மிகுந்த சந்தோசத்தில் ஆழ்த்தியுள்ளது.உலகக்கோப்பை வெற்றிக்கு பிறகு , இந்த ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் வெற்றி ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஒரு நாள் போட்டி தொடர் வருகிற 12ம் தேதி தொடங்கவுள்ளது. தோணி அணியில் இடம் பெற்றுள்ளதால் இந்த தொடரை காண ரசிகர்கள் ஆர்வத்தில் உள்ளனர்.