எலும்பு புற்று நோய்! ஹாஸ்பிடலில் அட்மிட் ஆன சிறுமி! ஒரு காலை திருப்பி வைத்து ஆப்பரேசன் செய்த டாக்டர்கள்! என்ன காரணம் தெரியுமா?

லண்டன்: எலும்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு செயற்கைக் கால் பொருத்தி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.


எமிலியா எல்டிரெட் என்ற 9 வயது சிறுமி, ஆஸ்டியோசார்கோமா எனும் அரிய வகை எலும்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டாள். இச்சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் ரோட்டேஷன்பிளாஸ்டி எனும் சிகிச்சை மூலமாக, கால் எலும்பை திருப்பி அமைத்து அறுவை சிகிச்சை செய்து சிறுமியை காப்பாற்றினர்.

இதன்படி, சிறுமியின் பாதம் பின்புறமாக திரும்பிய நிலையில் பொருத்தப்பட்டது. பிறகு, இதே காலுக்குப் பதிலாக, செயற்கைக் கால் பொருத்தப்பட்டுள்ளது. தற்போது, சிறுமி மிகவும் உற்சாகத்துடன் விளையாடி மகிழ்வதை, அவளது பெற்றோர் கண்டு மனமகிழ்ந்துள்ளனர். அதிக செலவு பிடிக்கும்  

இந்த வகை அறுவை சிகிச்சையால் சிறுமிக்கு ஏற்பட்ட புற்றுநோய் முற்றிலுமாக விரட்டப்பட்டுவிட்டது குறிப்பிடத்தக்கது.