பாலத்தில் தொங்க விடப்பட்ட சிதைந்த உடல்கள்! அவக்கோடா பழத்திற்காக சிந்தப்படும் ரத்தம்!

அவக்கோடா என்று அமெரிக்கர்கள் அழைக்கும் பழத்திற்கு நாம் பட்டர் ஃபுரூட் என்று பெயர் வைத்திருக்கிறோம்.


அந்த பச்சைக்கலர் பழத்தை வெட்டி உள்ளே வெள்ளை நிறத்தில் இருக்கும் அதன் சதையை ஜூசாக்கி நீங்கள் எத்தனையோ முறை சாப்பிட்டு இருப்பீர்கள்,இருபது ரூபாய்க்கும் முப்பது ரூபாய்க்கும்.அந்த பழத்திற்காக மெக்சிக்கோ நாட்டில் ரத்த வெள்ளம் ஓடுகிறது என்றால் நம்ப முடிகிறதா?.அதுவும் கொக்கைன் போதைப் பொருளுக்கு புகழ் பெற்ற மெக்சிக்கோ நாட்டில்!.வேறு வழியில்லை நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும் அதுதான் எதார்த்தம்.

மெக்சிக்கோவில் இருந்து,அமெரிக்கா , கனடா போன்ற நாடுகளுக்கு கொக்கைன் போதைப் பொருளை கடத்தும் தொழில் அங்கே நிறுவன மயமாகி விட்டது.அத்தகைய நிறுவனங்களை ' கார்ட்டல்' என்று அழைப்பார்கள் அத்தகைய கார்ட்டல்கள் சொந்தமாக சிறு படையே வைத்திருக்கும்.

தங்கள் ' வியாபாரத்தில்' தலையிடுவது சக கார்ட்டலாக இருந்தாலும் போலீசாக இருந்தாலும் அவர்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்தப்படும்.கடந்த ஆண்டு நடந்த அப்படிப்பட்ட ஒரு தாக்குதலில் ஐந்து பேரின் தலைகளைத் துண்டித்து எடுத்து வந்து,இருட்டில் கொக்கைன் போதையில் இளைஞர்கள் நடனமாடிக்கொண்டு இருந்த ஒரு அரை இருட்டு இரவு விடுதி டான்ஸ் ஃபுளோரில் உருட்டி விட்டு போயிருக்கிறார்கள்.

அத்தகைய கார்டெல் கேங்குகள் இப்பொழுது அவக்கோடா பழத்துக்காக அடித்துக்கொண்டு சாகிறார்கள்.காரணம் அமெரிக்க மக்களின் அவக்கோடா மோகம்.அமெரிக்காவில் விற்கப்படும் 5 அவக்கோடா பழங்களில் நான்கு மெக்சிக்கோவில் விளைந்தவை.அந்த பழங்களின் மார்கெட் விலை ஆண்டுக்கு 2.2 பில்லியன் டாலர்கள். நம்ம ஊர் காசுக்கு 15 ஆயிரம் கோடி ரூபாய்.மார்கெட்டை யார் கைப் பற்றுவது என்பில் மெக்சிக்கன் கார்ட்டல்களிடையே ரத்தம் தெரிக்கும் மோதல்கள் நடந்து வருகின்றன.

இந்தப் போட்டியில் ஜெலிஸ்கோ என்கிற கேங் முதலிடத்தை பிடிக்க கடுமையாக போராடி வருகிறது. அதன் தொடர்ச்சியாக மெக்சிக்கோ நகரில் இருந்து 400 கி.மீ தொலைவில் உள்ள உரோப்பான் நகரில் உள்ள ஒரு பாலத்தில் ஒன்பது சிதைக்கப்பட்ட.அரை நிர்வான் உடல்களை தொங்க விட்டு ஒரு பேனரையும் கட்டி இருக்கிறார்கள்.அதில் அன்பான மக்களே உங்கள் வேலையை மட்டும் பாருங்கள் என்று தங்களின் கார்ட்டலின் பெயரின் சுருக்கமான ,CJNG என்பதையும் பிரிண்ட் செய்து தொங்க விட்டு இருக்கிறார்கள்.

அதற்கு புதியதலைமுறை கார்ட்டெல் என்று பொருளாம்.போதை பொருளான கொக்கைனை கடத்தினால் அமெரிக்காவின் டி.இ.எ என்கிற போதைப் பொருள் தடுப்பு பிரிவுடன் மோத வேண்டும்.சிக்கினால்  வாழ்நாளை சிறை!.ஆனால்,அவக்கோடா போரில் அவர்கள் எத்தனை பேரைக் கொன்றாலும்.அது மெக்சிக்கோ அரசின் பிரட்சினை.அவக்கோடாவை அமெரிக்க நாட்டுக்கு கொண்டு செலவது சட்ட பூர்வ வணிகம்.

இதனால் மெக்சிக்கோவில் சிந்தப்படும் ரத்தம் குறித்து அமெரிக்கர்கள் கேள்வி கேட்பது இல்லை.இதனால் இது மிகக் கொடூரமாக வளர்ந்து விட்டது.இதை அறிந்த அமெரிக்கர்கள் ' நோ ஃபார் பிளட் அவக்கோடா' என்ற இயக்கத்தை துவங்கி இருக்கிறார்கள். அனாலும் , கல்வியிலும் சட்ட ஒழுங்கிலும் பிந்தங்கி இருக்கும் மெக்சிக்கோவில் இந்த அவக்கோடா போரில் வருடத்திற்கு  சராசரியாக 35 ஆயிரம் பேர் கொல்லப் படுகிறார்கள்.

நம்ம முருகன் தந்தையிடம் ஒரு பழத்துக்காக சண்டை போட்டு பிரிந்தது போல ஒரு பழத்தால் மெக்சிக்கோ தொடர்ந்து ரத்தம் சிந்திக்கொண்டு இருக்கிறது.