பிளாக்மெயில் பி.ஜே.பி.க்கு 5 அதிரடி கேள்விகள்..! இதுதான் ஜனநாயப் படுகொலையா?

தேசியவாத காங்கிரஸ் கட்சி மராட்டிய மாநில சட்டமன்றத் தேர்தலில் 54 இடங்களில் வெற்றி பெற்றது. எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்கும் நிலையில் இல்லாததால் பாஜக தவிர்த்து சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் ஆகியவையின் கூட்டணி ஆட்சியமைக்க தயாராகி வந்தது.


இந்த நிலையில் இரவோடு இரவாக பா.ஜ.க.வுடன் அஜித் பவார் கூட்டணி ஆட்சி அமைத்து பதவி ஏற்றுள்ளனர். நியாயமான வகையில் கவர்னர் செயல்படுபவராக இருந்தால், எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கையைக் கணக்கிட்டு மெஜாரிட்டி இருப்பதை கவர்னர் உறுதிபடுத்தியிருக்க வேண்டும். அப்படியில்லாமல் பதவிப்பிரமாணம் செய்திருப்பது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலை என்று எச்சரிக்கை செய்திருக்கிறது தேசியவாத காங்கிரஸ். 

இந்த நிலையில் மகாராஷ்டிரா கவர்னருக்கு 5 கேள்விகளை எழுப்பி பதில் கேட்டுள்ளது தேசிய வாத காங்கிரஸ். இதோ, அந்தக் கேள்விகள்.

1) சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கூட்டணி விடியற்காலை சென்று பதவிப்பிரமாணம் செய்துவைக்கக்கோரியிருந்தால் கவர்னர் செய்து வைத்திருப்பாரா?

2 ) பட்னாவிஸ், அஜித்பவார் கோஷ்டி பதவியேற்புக்குப்பின் உடனடியாக 10 எம்.எல்.ஏ.க்களை டில்லி க்கு விமானத்தில் கடத்தியது ஏன்?

3) சிவசேனா கூட்டணி ஆட்சி அமைத்திருந்தாலும் அஜித் துணைமுதல்வர்தானே. அப்படியிருக்க அவர் ஏன் பா.ஜக.வுக்கு சென்றார்?

4) பா.ஜ.க.வின் பிளாக் மெயில் அரசியல் எவ்வளவு நாளைக்கு தாக்குப் பிடிக்கும்?

5) எந்த மாநில முதலமைச்சர்களும் அதிர்ச்சியிலிருந்து மீண்டு, வாழ்த்து கூறாதபோது தமிழக முதல்வர்கள் மட்டும் முந்திக்கொண்டு அவர்களை வாழ்த்தியது ஏன்? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் தமிழக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சாரதி.