உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பாரதிய ஜனதாக் கட்சியின் மகிளா மோர்சாவை சேர்ந்த பெண் எம்.பி. சுனிதா சிங் கவுர் பேசிய பேச்சுதான் இன்று இந்தியாவை அதிர வைத்துள்ளது.
முஸ்லீம் பெண்களை தெருவுக்கு இழுத்து வந்து கற்பழியுங்கள்! பாஜகவினருக்கு உத்தரவு போட்ட பெண் எம்பி!

அவர் ஃபேஸ்புக்கில் வெளியிட்ட ஒரு பதிவு இஸ்லாம் சமூகத்தினரை பதற வைத்திருக்கிறது. இதுதான் அவர் வெளியிட்ட பதிவு. இஸ்லாமியர்கள் பிரச்னையைத் தீர்க்க இது மட்டும்தான் ஒரே வழியாக இருக்கிறது. ஹிந்து சகோதர்கள் 10 பேர் ஒன்றுசேர்ந்து இஸ்லாம் பெண்களை அம்மா, சகோதரிகள் என்று பார்க்காமல் தெருவில் இழுத்துப்போட்டு கூட்டு வன்புணர்வு செய்து, அவர்களை பஜாருக்கு நடுவில் தூக்கில் போடுங்கள்.
இதுதான் இந்தியாவை காப்பாற்றும் வழி’’ என்று குறிப்பிட்டிருந்தார். இவர் ஃபேஸ்புக்கில் பதிவு செய்ததை உடனடியாக அழித்துவிட்டாலும், அந்த ஸ்கிரீன்ஷாட் வைரலாக நாடு முழுவதும் பரவி வருகிறது. இந்த செய்தி பிரபலமான த வயர் ஆன்லைனில் வெளியிடப்பட்டு பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
இந்த செய்தி வெளியானதும், பா.ஜ.க.வில் சுனிதா சிங் வகித்துவந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டிருப்பதாக பா.ஜ.க. அறிவித்துள்ளது. ஆனால், அது மட்டும் போதுமா என்பதுதான் கேள்வி. ஒரு பெண்ணே பெண்ணை வன்புணர்வு செய்யுங்கள், தூக்கில் போடுங்கள் என்று எழுதுவது எப்படி நியாயமாகும். இவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து, கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். அபோதுதான் மததுவேஷிகள் அடங்கி நடப்பார்கள்.