சரத்குமார், டி.ராஜேந்தர், பாக்கியராஜு மூன்று பேருக்கு தூது போகும் பா.ஜ.க.

எப்படியாவது தமிழகத்தில் பா.ஜ.க. கட்சிக்கு ஒரு மரியாதையைக் கொண்டுவர வேண்டும் என்று மோடி எத்தனையோ முயற்சிகளை செய்துவருகிறார். ஆனால், அவர் செய்யும் அத்தனையும் ரிவர்ஸ் ஸ்விங்க் ஆகி பா.ஜ.க.வின் பெயரை மீண்டும் டேமேஜ் செய்வது வேறு விஷயம்.


இந்த நிலையில், இப்போது மூன்று பேருக்கு பா.ஜ.க. தூது போயிருக்கும் விவகாரம் வெளியே வந்திருக்கிறது. ஆம், சரத்குமார், டி.ராஜேந்தர், பாக்கியராஜ் ஆகியோரை தங்கள் கட்சியில் இணையும்படி தூது போயிருக்கிறது தமிழ்க பா.ஜ.க.

தலைமை பதவிக்கு வாய்ப்பு இருக்கிறதா என்று சரத்குமார் கொக்கியைப் போட்டிருக்கிறார். டி.ராஜேந்தர் இன்னமும் எனக்கு நல்ல நேரம் தொடங்கவில்லை என்று கூறிவிட்டார். பாக்கியராஜ் கும்பிட்ட கையுடன் அனுப்பிவிட்டாராம்.

ஆக, சரத்குமாரை எப்படியாவது இழுத்துச்செல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டு சுத்தி வருகிறார்களாம். சரத்குமார் போயிட்டா பா.ஜ.க. பலம் பெற்றுவிடுமா என்று கேட்டால், சிரிக்கத்தான் செய்கிறார்கள்.