ஜொள்ளு ஆண்களுக்கு பெண் வலைவீசி, கோடிகளில் சுருட்டிய பா.ஜ.க. பிரமுகர்! உஷாரய்யா உஷார்!

ஹலோ… நான் சியாமளா பேசுறேன், சாப்பிட்டீங்களா? என்று திடீரென யாராவது ஒரு பெண் செக்ஸியான குரலில் பேசினால், மயங்கிப்போய் பதில் பேசிவிடாதீர்கள்.


அம்புட்டுத்தான். அய்யோ ராங் நம்பர் என்று ரொம்பவும் பிகு செய்து, பின் பேசத் தொடங்குவார் அந்த சியாமளா. அந்தப் பேச்சு கொஞ்சம் கொஞ்சமாக அந்தரங்கம் வரைக்கும் போகும்.

அப்புறமென்ன, நேரில் சந்திக்கலாமென்று ஆசை வார்த்தைகள் வீசப்படும். உடனே நீங்களும் செண்ட் அடித்துக்கொண்டு ஜம்மென்று கிளம்பிப் போவீர்கள். உங்களை அறைக்குள் இழுத்துப்போட்டு ஆசை ஆசையாகப் பேசி, உங்கள் ஒட்டுமொத்த உடையையும் உருவியெடுத்து, ச்சீய் என்று சிரிப்பார் சியாமளா. நீங்கள் குஷியாகும் நேரம், கதவு தட்டப்படும். நாலைந்து தடியன்கள் கையில் வீடியோ காமராவுடன் நிற்பார்கள்.

உங்கள் அண்ணாக்கயிறு வரை அவுத்துக்கொடுத்துவிட்டு வர வேண்டியதுதான். நீங்கள் கொண்டுபோன வண்டிகூட திரும்பக் கிடைக்காது. இப்படி, திருப்பூரில் அவமானப்பட்டு, அசிங்கப்பட்ட ஆண்கள் கொஞ்ச நஞ்சமல்ல.

யார் அந்த சியாமளா? எப்பேர்ப்பட்ட தில்லாலங்கடி என்று டென்ஷன் ஆகாதீர்கள். ஏனென்றால் சியாமளா என்பது அம்புதான். அதனை குறிபார்த்து வீசுபவர் திருப்பூரில் உள்ள பி.ஜே.பி. பிரமுகர் மோதிலால். 

இந்த வில்லங்க விவகாரம் திவ்யபாரதி என்ற பெண் மூலம்தான் வெளியே வந்திருக்கிறது. கடந்த வாரம் திருமுருகன்பூண்டி போலீஸில், அவர்தான் மோதிலால் பற்றி அக்குவேறு ஆணிவேராக புகார் கொடுத்து சிக்க வைத்தார்.

அவரிடம் சியாமளாவைப் போன்று ஏராளமான பெண்கள் இருக்கிறார்களாம். அவர்களுடைய வேலை, பசையுள்ள பார்ட்டிகளாகப் பார்த்து போன் நம்பர் வாங்கி, ஆசையாகப் பேசி மயக்க வேண்டியதுதான். வலையில் சிக்கும் ஆண்களை, டிரஸ் இல்லாமல் வீடியோ எடுத்து வைத்துக்கொள்வதால், யாரும் போலீஸ்க்குப் போவதில்லை. இந்த வகையில் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டவர்களை ஏமாற்றி கோடிகளில் சுருட்டிவிட்டதாகச் சொல்லப்படுகிறது.

ஆனால், திவ்யபாரதி மட்டும் ஏன் போனார் என்பதிலும் வில்லங்கம்தான். இவரும் ஆசை வலை வீசி பிடிக்கும் பெண்களில் ஒருவராக இருந்தார் என்றும், இவரை திருமணம் செய்துகொள்வதாகச் சொல்லி மோதிலால் ஏமாற்றிவிட்டதால் போலீஸ் ஸ்டேஷன் வரை போய்விட்டதாகச் சொல்லப்படுகிறது.

இப்போது மோதிலால் ஊரைவிட்டு தப்பியோடிவிட்டார். அவரை பிடிக்கும் முயற்சியில் போலீஸார் தீவிரமாக இருக்கிறார்கள். திவ்யபாரதி போனில் இருந்து ஒருசில வீடியோ மற்றும் படங்களை போலீஸார் கைப்பற்றி இருக்கிறார்கள்.

இனிமேல், யாராவது செக்ஸியாக போனில் பேசி ராங் நம்பர் என்று சொன்னால், உடனே போலீஸுக்குப் போய்விடுங்கள், இல்லைன்னா அம்புட்டுத்தான்.