தலித் இளைஞனுடன் வீட்டை விட்டு ஓடிய பிராமின் எம்எல்ஏ மகள்! அதிர வைக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பு!

உத்திர பிரதேச மாநிலம் பரிலி செயின்பூர் எம்.எல்.ஏ ராஜேஷ் மிஸ்ரா, பிராமணரான இவர் பாஜக கட்சியை சேர்ந்தவர்.


இவரது மகள் சாக்‌ஷி மிஸ்ரா 23 வயதே ஆன நிலையில் தனது உடன் படித்த அஜிதீஸ் குமார் என்பவரை காதலித்து வந்துள்ளார். அஜீதீஸ் தலித் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் சாக்சியின் தந்தையும் பாஜக எம்எல்ஏவுமான ராஜேஸ் மிஸ்ரா காதலுக்கு மறுப்பு தெரிவித்து வந்துள்ளார்.

இதை அடுத்து இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். மேலும் தங்கள் இருவர் உயிருக்கும் தந்தையும், எம் எல் ஏவுமான ராஜேஸ் மிஸ்ராவினால் நிச்சயமாக ஆபத்து உண்டு எனவே அவரிடம் இருந்து எங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என மகள் சாக்‌ஷி வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார்.

பாஜக பிரமுகர் மகள்.என்பதால் அந்த வீடியோ பெரும் வைரலாகி வருகிறது, இதற்கிடையில் டிஐஜி பாண்டே பேசும் போது காதலர்கள் இருக்கும் இடம் பற்றித தகவல் தெரிந்தால் நிச்சயமாக சட்டத்தின் படி அவர்களுக்கு போதுமான பாதுகாப்பை அளிக்க காவல் துறை தயாராக உள்ளது என தெரிவித்துள்ளார்.

இதனிடையே தனது மகளின் காதலை தான் எதிர்க்கவில்லை என்றும் தனது மகள் காதலிக்கும் நபர் வேலை இல்லாமல் சுற்றி வருவதாகவும் அவர் சம்பாத்யத்திற்கு என்ன செய்யப் போகிறார் என்கிற கேள்விக்கு விடை கிடைக்கவில்லை என்றார். இதே போல் தனது மகளுக்கும் அவளது காதலனுக்கும வயது வித்தியாசம் அதிகம் என்றும் எம்எல்ஏ கூறியுள்ளார்.