காதலியின் அந்தரங்க புகைப்படங்களை நண்பர்களுக்கு அனுப்பிய பாஜக பிரமுகர்! அதிர வைக்கும் காரணம்!

முன்னாள் காதலியும் அந்தரங்க புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்ட பாஜக பிரமுகர் மீது இளம்பெண் புகார் அளித்ததால், போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.


புதுச்சேரி பகுதியை சேர்ந்தவர் ராக் பிரெட்ரிக்ஸ். இவருக்கும் கர்நாடக மாநிலம் ஹூப்ளி பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கு இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. 

கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துள்ளனர். இருப்பினும் ராக் இளம்பெண்ணை தொடர்ந்து தொலைபேசி மற்றும் குருஞ்செய்திகள் மூலமாக துன்புறுத்தி இருக்கிறார். மேலும் இளம்பெண் அவருக்கு அனுப்பிய அந்தரங்க புகைப்படங்கள் அனைத்தையும் இணையதளத்தில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி இருக்கிறார்.  

இருவருக்கும் இடையே இந்த மோதல் அதிகமானதால், ஆத்திரமடைந்த ராக் அந்த இளம்பெண்ணின் புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.  இது குறித்து இளம்பெண் ஹுப்ளி காவல்நிலையத்தில் ராக் மீது புகார் அளித்திருக்கிறார். இந்த புகாரின் அடிப்படையில் புதுச்சேரியை சேர்ந்த ராக்கை போலீசார் கைது செய்திருக்கின்றனர்.  ராக் அவர் வசிக்கும் பகுதியில் பாஜக செயலாளராக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.