22 வயது மகளை கடத்திச் சென்ற பா.ஜ.க தலைவர்! அரசியலில் முன்னேற விபரீத செயல்!

மேற்கு வங்க மாநிலம் பிர்பும் மாவட்டத்தில் முக்கிய அரசியல்வாதி ஒருவர் தனது மகளைக் கடத்தியதாக போலீசார் கைது செய்ததையடுத்து வன்முறை வெடித்தது.


ஆளும் திரினாமூல் காங்கிரசில் இருந்த சுப்ரபாத் பட்டபியால் 5 மாதங்களுக்கு முன் பா...வில் இணைந்தார். இந்நிலையில் இவரது மகளான 22 வயது ஆசிரியை  கடந்த வியாழக்கிழமை ஆயுதம் தாங்கிய இரு இளைஞர்களால் கடத்தப்பட்டார்.

 

இது குறித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்டு வந்த போலீசார் தங்களுக்கு கிடைத்த ரகசியத் தகவலின் பேரில் வடக்கு தினஜ்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு ரயில் நிலையத்தில் இருந்து பெண்ணை மீட்டனர்

 

கடத்திய இருவரையும் கைது செய்தனர். முதல் கட்ட விசாரணையில் அவர்களிடம் இருந்து பெற்ற தகவல்களையும், ஆதாரங்களையும் கொண்டு சுப்ரபாத் பட்டபியாலை போலீசார் கைது செய்தனர். குடும்பத் தகராறு மற்றும் அரசியல் சூழ்நிலையே பட்டபியால் தனது மகளைக் கடத்தக் காரணம் என போலீசார் தெரிவித்துள்ளனர்

 

இந்நிலையில் இந்தக் கைதுக்குப் பின்னர் திரினாமூல் காங்கிரஸ் கட்சி இருப்பதாக பா... கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர். இதையடுத்து பா...வினர் கடும் வன்முறைகளில் ஈடுபட்டனர். சாலைகளை மறித்து கலவரத்தில் ஈடுபட்ட அவர்கள் சாலைகளில் டயர்களையும் கொளுத்திப் போட்டனர்

 

லாபூர் சட்டப் பேரவை உறுப்பினர் மோனிருல் இஸ்லாமின் வாகனத்தைக் கொளுத்திய அவர்கள் அவரைத் துரத்தியத்தியதையடுத்து அவர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். காவல் நிலையத்தை முற்றுகையிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் காவல் நிலையத்தின் மீது கற்களையும் கட்டைகளையும் வீசி எறிந்தனர்

 

இதையடுத்து தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்த போலீசார் 12 பேரை கைது செய்தனர். 151 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். பட்டபியால் கைது ஒரு அரசியல் சதி என பா... குற்றம்சாட்டியுள்ளது.

 

உண்மையான குற்றவாளிகளை மறைத்து பட்டபியாலை கைது செய்ததன் மூலம் அவருக்கு அழுத்தம் கொடுத்து திரினாமூல் காங்கிரஸ் கட்சிக்குத் திரும்பச் செய்வத்தே திட்டம் என பா... கூறியுள்ளதுபெற்ற மகளை கடத்தி அரசியல் பரபரப்பை ஏற்படுத்திய பா.ஜ.க பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.